இந்த வலைப்பதிவில் தேடு

நல்லாசிரியர் விருது தேர்வு முறையில் மாற்றம்; த.வெ.க., ஆட்சியில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

புதன், 22 ஜூலை, 2026




தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்டுதோறும் செப்., 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் அரசியல், அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் கடைசி நேரம் விருது பட்டிலில் மாற்றம் செய்யப்பட்டதால் சில ஆண்டுகளாக இவ்விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் ஆர்வம் குறைந்தது. த.வெ.க., ஆட்சியில் அது போன்ற முறைகேடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

இந்தாண்டுக்கான விருதுக்கு ஆசிரியர்கள் தற்போது விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர். மாவட்ட அளவில் சி.இ.ஓ., தலைமையில் தேர்வுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் டி.இ.ஓ.,க்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன முதல்வர், சீனியர் வட்டார கல்வி அலுவலர், தலைமையாசிரியர் இடம் பெற்றுள்ளனர்.

இது வரை மாவட்ட தேர்வுக் குழு நேர்காணல் நடத்தி 1:2 என்ற எண்ணிக்கையில் மாவட்ட அளவில் ஆசிரியர் தகுதி பட்டியல் தயார் செய்யப்படும். இந்த பட்டியலில், அரசு உதவிபெறும் தொடக்க, நடு, உயர், மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியருக்கு பிரதிநித்துவம் அளித்து, விதிகளுக்கு உட்பட்டு ஆசிரியர் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

இப்பட்டியல் மாநில தேர்வுக் குழுவிற்கு வழங்கப்படும். அங்கு தான் அரசியல், அதிகாரிகள் சிபாரிசு புகுந்து இறுதி பட்டியலில் மாற்றம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். பல மாவட்டங்களில் மாவட்ட பட்டியலில் இடம் பெறாத ஆசிரியர்களுக்கு இவ்விருது கிடைத்து வந்தது. இதனால் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிப்பது குறைந்தது.

எனவே இந்தாண்டு மாவட்ட தேர்வு குழு பட்டியலில் உள்ளவர்களை மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற உத்தரவை த.வெ.க., அரசு வெளிப்படையாக பின்பற்ற வேண்டும். இதற்காக மாவட்டம் வாரியாக நேர்காணல் நடத்தி இறுதி செய்யப்படும் ஆசிரியர் பட்டியல் விபரத்தை அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களில் நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக ஒட்டிவைக்க வேண்டும் போன்ற மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்போது தான் வரும் ஆண்டுகளில் தகுதியான ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முன்வருவர் என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent