சிறப்பு டெட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் 5 நாள்களுக்குள் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், ஆசிரியா்களின் வசதிக்காக நிகழாண்டு 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அந்த வகையில், பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடத்தியது.
இதனைத் தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணைகளின்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இறுதி விடைக்குறிப்புடன் திங்கள்கிழமை (அக்.12) வெளியிட்டது.
இந்தத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் ஐந்து நாள்களுக்குள் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் புதுச்சேரி தேர்வர்களுக்கு அவர்களது மதிப்பெண்கள் மட்டும் இத்தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வர்களின் ஆசிரியர் தகுதித்தேர்வுச் சான்றிதழ் புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் என ஆசிரியர் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக