தொடர் விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்க உள்ளன. 3 நாட்களாக கனமழை பெய்ததால், மாணவ மாணவியரின் பாதுகாப்புக்காக பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பழைய கட்டடங்கள் இருந்தால், பொதுப் பணித்துறையிடம் கூறி இடிக்க வேண்டும். பழுதடைந்த சுற்றுச்சுவர், வகுப்பறை சுவர் கள் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்க வேண்டும். மின் ஒயர்கள், பழு தடைந்த சுவிட்ச்களை மாற்ற வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்பு ணர்வை அளித்து, மழைநீர் தேங்காமல் இருப் பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சிய தண்ணீரை குடிக்க கொடுப்பதையும், காய்ச்சல் இருந்தால் சிகிச்சையுடன் வீட்டில் ஓய்வெடுக்க வும் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மழையால், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் அதிக தண்ணீர் இருப்பதால், மாணவர்களை அங்கு செல்ல அனுமதிக்க வேணடாமென, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வும், தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது
இது வழக்கமான பருவமழை குறித்த அறிவிப் புதான் என்றாலும், தற்போது சூப்பர் எல்நினோ பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதால், கல்வித்து றையின் உத்தரவுகளை பெற்றோருக்கு தெரி வித்துள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக