இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 2 தேர்ச்சியில் 1ல் இருந்து 7-ம் இடம் போன மாவட்டம்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019


பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.விருதுநகர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து வந்தது. இந்நிலையில் 2013- 14, 2015-16 ஆண்டுகளில் 3வது இடம் பிடித்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் மேலும் குறைந்து 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.


208 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 747 பேர் தேர்வு எழுதி 23 ஆயிரத்து 371 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.44. கடந்த ஆண்டு 97.05 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், ''ஆசிரியர்களும், மாணவர்களும் கடுமையாக உழைத்தனர். ஆனாலும் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எந்த பள்ளியில் தேர்ச்சி குறைந்துள்ளது என கண்டறியப்பட்டு தனிக்கவனம் செலுத்தவும், பாடங்களை எளிமையாக நடத்தவும் அறிவுறுத்தப்படும். 

ஒரு பள்ளியில் தேர்ச்சி வீதம் சரிந்தால் கூட தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புண்டு,''என்றார்.வெள்ளையாபுரம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம் கூறுகையில், ''திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்துார், கன்னியாகுமரி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் அதிகம். அரசு பள்ளிகள் குறைவு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அதிகம். கேள்வியை புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால் கடந்த ஆண்டு நுாறு சதவீதம் பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி சிறிது குறைந்து விட்டது. கடினமான கேள்விகளாலும் தேர்ச்சி சற்று நழுவி விட்டது. மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க உழைப்போம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent