வரும் கல்வியாண்டில் புதிய ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளை தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய பள்ளிகளை தொடங்க ஏதுவான இடம், மற்றும் அப்பகுதியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து புவியியல் தகவல் முறைமை ((GIS MAP)) -இன் படி ஆராய்ந்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, போதுமான கட்டிடம், வகுப்பறைகள், இட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அனுப்புமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் மின்னஞ்சல் மூலம் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக