இந்த வலைப்பதிவில் தேடு

புதுச்சேரி - ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

வெள்ளி, 31 மே, 2019



மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த ஆண்டு புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை 52 நாட்கள் முடிந்தபிறகு, ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது.

புதுச்சேரியில் ஜூன் 3ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி இன்று தெரிவித்துள்ளார்.

கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.

ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை.

முன்னர் அறிவித்தபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

Popular Posts

Recent