பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்–்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக