இந்த வலைப்பதிவில் தேடு

நிரம்பி வழியும் கேரள அரசுப் பள்ளிகள் - மூன்றே நாட்களில் 30 ஆயிரம் குட்டீஸ் - கேரள அரசு அசத்தல்

திங்கள், 6 மே, 2019

4-14 வயது வரை கட்டாய இலவசக்கல்வி என்பதை அர்த்த முள்ளதாக்கியிருக்கிறது கேரள அரசு. மூன்றே நாட்களில் 30 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2 லட்சத்து 71 ஆயிரத்து 813குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இது முந்தைய ஆண்டைவிட 15ஆயிரம் அதிகமாகும். தொடக்க கல்விவகுப்பறைகள் இந்த ஆண்டு ஹைடெக்காகமாற உள்ள நிலையில் நடப்பு ஆண்டு 3 லட்சத்துக்கும் கூடுதலாக உயர வாய்ப்புள்ளது. கேரள அரசு கடந்த 2 ஆண்டுகளில் உயர்நிலை வகுப்பறைகளை ஹைடெக்காக மாற்றியதை தொடர்ந்து அவை மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.


கடந்த ஆண்டு 45 ஆயிரம் வகுப்பறைகள் ஹைடெக்காக மாற்றப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளிலிருந்து தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க அதிக அளவில் பெற்றோர் ஆர்வம்காட்டி வருகின்றனர். அதன் விளைவாக 2017-18 இல் ஒன்றரை லட்சம் மாணவர்களும், 2018-19இல் 1.8 லட்சம் மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களை மாற்றுச் சான்று இல்லாமலே அரசுப்பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent