இதற்காக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த மாதம் மே 20 முதல் 22க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற தவறும் 760 பள்ளிகள் மூடும் சூநிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும், அங்கீகரிக்கப்படாத சில பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சிகள் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. மூடப்படும் வாய்ப்புள்ள 760 பள்ளிகளில் அதிகபட்சமாக 86 பள்ளிகள் திருப்பூரில் இயங்கி வருவதாகவும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன எனவும் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக