இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்கள் புகைப்படத்துடன் 'ஆன்லைன் 'டிசி': இந்த ஆண்டு முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு

வெள்ளி, 3 மே, 2019

அனைத்து பள்ளிகளிலும், 'எமிஸ்' எண்ணுடன் கூடிய, டிஜிட்டல் மாற்று சான்றிதழ் வழங்க, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, பள்ளியை விட்டு செல்லும் மாணவர்களுக்கு, காகிதத்தில் எழுதப்பட்ட மாற்று சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த மாற்று சான்றிதழை, நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது கடினம். இந்த நிலையை போக்க, பள்ளிகளில் டிஜிட்டல் சான்றிதழ்கள், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டன. சில பள்ளிகளில், சோதனை முறையில் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதள குறியீட்டு எண்ணுடன் கூடிய, இந்த சான்றிதழை அனைத்து பள்ளிகளும் ஒரே நேரத்தில் கையாளமுடியும்.ஒவ்வொரு பள்ளி யும், வேறு பள்ளி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றால், அந்த மாணவர்களின் எமிஸ் எண் மட்டும் இருந்தால், பள்ளி கல்வியின் ஆன்லைன்தகவல் தொகுப்பில் இருந்து, டிஜிட்டல் மாற்று சான்றிதழ்களை எளிதாக எடுத்து கொள்ள முடியும் என, அதிகாரிகள்தெரிவித்தனர்.


இந்த ஆண்டு முதல் மாணவர்கள் புகைப்படத்துடன்' ஆன்லைன்' மாற்றுச் சான்றிதழ் ('டிசி') வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்கள் குறித்து 'எமிஸ்' மூலம் முழுவிபரம், ஆதார் எண்ணுடன் கல்வித்துறை 'சர்வரில்' பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு வரை கையால் எழுதி 'டிசி' தலைமையாசிரியர் கையெழுத்துடன் வழங்கப்பட்டது. 

நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளுக்கும் டிஜிட்டல் மயமாக ஆன்லைன் 'டிசி' வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாரியாக 11 எண் கொண்ட 'யூடிஎஸ்' எண் கல்வித்துறை வழங்கியுள்ளது. கம்ப்யூட்டரில் அதனை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளி சர்வரில் மாணவர்களை பற்றிய விபரங்கள் இருக்கும். 


மாணவரின் 'எமிஸ்' எண்ணை டைப் செய்தால் அதில் அவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, மதம், பெற்றோர் பெயர், பள்ளியில் சேர்ந்த தேதி, கடந்த ஆண்டு படித்த வகுப்பு, தேர்ச்சி பெற்ற வகுப்பு போன்றவை தெரியவரும். மாணவரின் மச்ச அடையாளங்களை பதிவு செய்து தலைமையாசிரியரின் டிஜிட்டல் கையெழுத்துடன் பிரின்ட் எடுக்கலாம்.

இரு நகல்கள் மாணவர்கள் புகைப்படத்துடன் கிடைக்கும். அதில் ஒன்று மாணவர்களுக்கும், மற்றொன்று பள்ளி ஆவணமாகவும் பராமரிக்கப்படும்.தேனி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கூறுகையில் 'பிளஸ் 2முடித்தவர்கள் தற்காலிகமாக கையால் எழுதப்பட்ட சான்று பெற்றுள்ளனர். மதிப்பெண் பட்டியலுடன் அவர்களுக்கு 'ஆன்லைன்' 'டிசி' வழங்கப்படும்,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent