இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 10 மே, 2019



அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப் படியை உடனடியாக வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள அரசின் கவனத்தை  ஈர்க்கும் வகையில், சென்னையில் 50 இடங்களில் இன்று அரசு ஊழியர்கள் கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது குறித்து அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர் அன்பரசு கூறியதாவது:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நிலவும் விலைவாசிக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப் படியை உயர்த்தி வழங்கி வருகிறது. அதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசும் இங்குள்ள அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப் படியை வழங்கி வருகிறது. இந்த பஞ்சப்படியை நிறுத்தி வைக்கின்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. கடந்த 1977ம் ஆண்டு முதல் இந்த அகவிலைப்படி வழக்கத்தில் உள்ளது.


இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த பிறகும் கடந்த 1.1.2019ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப் படி இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இது குறித்து கேட்டால் அரசு மவுனம் காத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் வழங்க முடியாது என்றும் காரணம் காட்டுகிறது. 

அகவிலைப்படியை வழங்குவதற்கும் தேர்தல் நடத்தை விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அரசு இன்னும் வழங்க மறுக்கிறது. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். சென்னையில் சேப்பாக்கம், டிஎம்ஸ், கிரீம்ஸ்ரோடு உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அன்பரசு தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent