இந்த வலைப்பதிவில் தேடு

மொபைல் மெமரியைத் தீர்க்கிறதா வாட்ஸ்அப்? இப்படி செஞ்சு பாருங்க!

வியாழன், 2 மே, 2019



"கல்யாணம் நிச்சயம் ஆனா வாழைமரம் கட்டுறதுக்கு முன்ன வாட்ஸ்அப் க்ரூப் ஒண்ண ஆரம்பிச்சிடுறாங்க" வாட்ஸ்அப்பில் வந்த ஃபார்வர்டுதான் இதுவும். ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. ஆபீஸ் க்ரூப், காலேஜ் க்ரூப், ஃபேமிலி க்ரூப், ஊர் க்ரூப், தெரு க்ரூப் என நாமிருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்களின் எண்ணிக்கை அதிகம்.

பெரும்பாலும் `text' மெசேஜ்கள் வந்தாலும் அதிக எண்ணிக்கையில் வீடியோக்களும் புகைப்படங்களும் கூட வருவதுண்டு. விளைவு, நம் மெமரி ஃபுல் ஆகிவிடும். 64 GB, 128 GB மொபைல் வாங்கினாலும் மெமரி போதாது என்னும் அளவுக்கு டிஜிட்டல் விஷயங்கள் தேவைப்படும் காலமிது. இந்தச் சூழலில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மெமரியை எப்படிக் கட்டுப்படுத்துவது? இரண்டு முக்கியமான வழிகள் உண்டு. முதல் வழி எளிமையானது. settingsலே இதற்குத் தீர்வு உண்டு. 



 Disable automatic media file downloads:


வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யும்போதே டீஃபால்ட்டாக இந்த ஆப்ஷன் தேர்வாகியிருக்கும். இதன் மூலம் நமக்கு யார் எந்த மெசேஜ் அனுப்பினாலும், அது புகைப்படமோ வீடியோவோ, தாமாக டவுன்லோடு ஆகிவிடும். பல க்ரூப்களில் வரும் மெசேஜ்களை நாம் படிக்கக்கூட மாட்டோம். ஆனால், அந்த க்ரூப்களில் வரும் விஷயங்கள் தாமாக டவுன்லோடு ஆகி நம் மொபைல் மெமரியைத் தின்றுவிடும். சிலர், wifi-ல் எல்லா மீடியாவும் டவுன்லோடு ஆகும்படியும், Mobile dataல் டவுன்லோடு ஆகாதபடியும் செட்டிங்க்ஸ் வைத்திருப்பார்கள். 




ஆனால், wifi-ல் கனெக்ட் ஆகியிருக்கும்போது டவுன்லோடு ஆகும் மீடியாவே பல ஜி.பி இருக்கும். எனவே, எல்லா மீடியாவையும் Manual download ஆக வைத்துக்கொள்வதே சிறந்தது. ஒவ்வொருமுறை வரும் வீடியோவையோ புகைப்படங்களையோ டவுன்லோடு க்ளிக் செய்வது கொஞ்சம் கடுப்பாக இருக்கலாம். 


மேலும், மெசேஜ் அனுப்பியவர் நாம் டவுன்லோடு செய்வதற்குள் அதை டெலீட் செய்துவிட்டால் அந்த மீடியா நமக்குக் கிடைக்காமல் போகலாம். இவையெல்லாம் உங்களுக்குப் பிரச்னை இல்லையென்றால் தாராளமாக மேனுவல் டவுன்லோடு ஆப்ஷன் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மொபைல் மெமரியைக் காப்பாற்றி மொபைல் வேகமாக இயங்க உதவும். இரண்டாவது வழி கொஞ்சம் வேலையெடுக்கும். க்ரூப்களில் வரும் மெசேஜ்களில் முக்கியமானவற்றை ஸ்டார் செய்துகொள்ளுங்கள். 

வாரம் ஒரு முறையோ மாதம் ஒருமுறையோ க்ரூப்களில் வரும் மெசேஜ்களை அழித்துவிடுங்கள். அப்படி அழிக்கும்போதும் மீடியாவையும் சேர்த்தா எனக் கேட்கும். ஆம், எனச் சொல்லிவிட்டால் மீடியாவையும் சேர்த்து டெலீட் செய்துவிடும். போலவே, ஸ்டார் செய்த மெசேஜ்களை மட்டும் அழிக்க வேண்டாம் எனவும் சொல்ல முடியும். 




இதனால், எத்தனை ஆயிரம் மெசேஜ்கள் இருந்தாலும் நமக்குத் தேவையான மெசேஜஸ் தவிர மற்றவற்றை அழித்து மெமரியைக் காப்பாற்றலாம். சில சமயம் எந்த க்ரூப் அதிக மெமரியை எடுக்கிறது என்பது தெரியாமல் போகலாம். அது தெரிந்தால் அந்த க்ரூப்பின் மெமரியை மட்டுமாவது அழிக்கலாம். அதற்கும் செட்டிங்கிலே வழியிருக்கிறது. இதில் எந்த க்ரூப் அல்லது தனிநபர் சாட் அதிக மெமரி எடுத்திருப்பதாகக் காட்டுகிறதோ அவற்றையெல்லாம் அழித்துவிடலாம். முக்கியமான ஃபோட்டோக்கள் அழிந்துவிடுமோ என்ற பயத்தில் எந்த மீடியாவையும் அழிக்காமல் வைத்திருப்பவர்களே அதிகம். அவர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் அனைத்தையும் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். 


வாரம் ஒரு முறை பேக்கப் எடுக்க செட்டிங் வைத்துவிட்டால் இந்தப் பயத்திலிருந்து தப்பிக்கலாம். அடுத்தவர்கள் மொபைலின் மெமரி பிரச்னையை நம்மாலும் தீர்க்க முடியும். அதற்கு, தேவையற்ற ஃபார்வர்டுகளைக் குறைக்கலாம். எதையும் இன்னொருவருக்கோ இன்னொரு க்ரூப்புக்கோ அனுப்பும்முன் அது தேவையா, அதனால் யாருக்காவது பயனிருக்குமா என ஒருமுறை யோசித்துவிட்டு அனுப்புங்கள். அதற்கு உதவும் சில டிப்ஸ் இங்கே.


மொபைல் மெமரியைத் தீர்க்கிறதா வாட்ஸ்அப்? இப்படி செஞ்சு பாருங்க! #MobileTips

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent