இந்த வலைப்பதிவில் தேடு

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் (12-06-2019)

புதன், 12 ஜூன், 2019

இன்றைய திருக்குறள்*

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

*பொருள்*:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
🌅🌅🌅🌅🌅🌅🌅
*இன்றைய பொன்மொழி*

வந்த வழியை மறவாதிருந்தால் எந்தப்பதவியும் பறிபோகாது.

If you remember your way of growth, you never lose your any posting.

🗣🗣🗣🗣🗣🗣🗣
*Important Daily Used Words*

*Profession & occupation*

🔮Stenographer - சுருக்கெழுத்தர்

🔮 Stone-mason. -கல் வேலை செய்பவர்

🔮 Superintendent - கண்காணிப்பாளர்

🔮 Supervisor   - மேற்பார்வையாளர்

🔮Surgen - அறுவை சிகிச்சை நிபுணர்
🍀💐🎋🌿☘🍀🎋
*இன்றைய மூலிகை*

*பிரண்டை*

பசியைத்தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்

*இஞ்சி*

செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்

☘☘☘☘☘☘☘
*பொது அறிவு*
1. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச விளையாட்டு தினம்?

*ஏப்ரல் -6*

2. உலக சுகாதார தினம் ?

*ஏப்ரல்-8*

🧬🧬🧬🧬🧬🧬🧬
*நூலாசிரியர் - நூல்கள்*

*கலைஞர் மு.கருணாநிதி*

குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை.
📫📫📫📫📫📫📫
*Today grammar*
*Progressive Form*

"Progressive Form" என்பது அடிப்படை வினைச் (base form) சொற்களுடன் "ing" யும் இணைந்து பயன்படுபவைகள் ஆகும். இதனை "Present Participle Form" என்றும் அழைப்பர்.

எடுத்துக்காட்டாக:
do -doing
go -going
play -playing

💐💐💐💐💐💐💐

*இன்றைய கதை*

*நேர்மையான பிச்சைக்காரர்*

ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்துஇ விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்துஇ தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும்இ மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான்.

 நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும்இ பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன்.

 அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டுஇ ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டுஇ பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும்இ தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன்இ தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால்இ அந்தப் பிச்சைக்காரன்இ இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால்இ அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால்இ தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர்.

 அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும்இ உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன்இ கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன்இ பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்துஇ மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*

✳AN -32 ,இந்திய விமானப்படையின் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு.

✳அரபிக் கடலில் உருவான ' வாயு ' புயல் குஜராத்தில் கரையை கடக்கிறது.

✳கிர்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி, பாகிஸ்தான் வான் வெளியில் பறக்க அனுமதி.

✳இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஓய்வு பற்றி வெளிநாட்டு வீரர்கள் புகழாரம்
 

Popular Posts

Recent