இந்த வலைப்பதிவில் தேடு

தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு

சனி, 22 ஜூன், 2019



நாம்  தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு. எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடலாம்?

பாதாம்:

இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.

இஞ்சி:

இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

கீரை:

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்:

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம்பழம்:

உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்
 

Popular Posts

Recent