இந்த வலைப்பதிவில் தேடு

ஈக்கள் அமரும்போது பின்னங் கால்களை வேகமாகத் தேய்த்துக் கொள்வதேன்?

புதன், 26 ஜூன், 2019

ஈக்கள் அமரும்போது பின்னங் கால்களை வேகமாகத் தேய்த்துக் கொள்வதேன்?

ஈக்கள் அமர்ந்து கொண்டிருக்கும்போது பின்னங்கால்களை அல்ல, முன்னங்கால்களையே வேகமாகத் தேய்த்துக் கொள்ளும்.

காரணம் ஈக்களின் வாய் உறுப்புகளின் அமைப்புத் தன்மை திரவ நிலை அல்லது கூழ்ம நிலை உணவுப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி தகவமைக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையால் சோற்றுப்  பருக்கையின் மீது ஈ உட்கார்ந்து, தன் முன்னிரு கால்களிலுள்ள நுண் உரோம நீட்சி உதவியால் உமிழ்நீரை  எடுத்து பருக்கையின் மீது தடவி.... கரைத்து, கூழ்ம நிலைக்கு மாற்றும்.

அதன் பிறகு தான் வாய் உறுப்புகள் மூலம் எடுத்துக் கொள்ளும்.

இந்தச் செயலுக்குத்தான் முன்னிரு கால்களை அடிக்கடி தேய்த்துக் கொள்கிறது.

ஈ மொய்த்துப் பண்டங்களைச் சாப்பிடக் கூடாது என்பதன் பின்னணி இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்..
 

Popular Posts

Recent