இந்த வலைப்பதிவில் தேடு

புதிய பாடத்திட்ட புத்தகம்: தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம்

ஞாயிறு, 9 ஜூன், 2019

தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கப்பட்டதற்கு தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிக் கல்வியில் 14 ஆண்டுகளுக்குப்பின் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க அப்போதைய பள்ளிக் கல்வித் துறை செயலராக இருந்த உதயசந்திரன் வழிகாட்டுதலின்படி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் உட்பட 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உழைப்பில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பரவலாக வரவேற்பு 

முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதிலும் காவி நிறத்தில் பாரதியார் படம் இடம்பெற்றது உட்பட சில சர்ச்சைகளும் எழுந்தன. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து தமிழாசிரியர் ஜெய்னுலாபிதீன் கூறும்போது, ‘‘முந்தைய பாடத்திட்டத்தில் தமிழ்புத்தகங்களில் தொடக்கமாக இறைவாழ்த்து இடம்பெற்றிருக்கும். அதன்பின் நாட்டுப்பண் மற்றும் மொழி வாழ்த்து இருக்கும். ஆனால், புதிய தமிழ் பாடத்திட்டத்தில் இறை வாழ்த்து நீக்கப்பட்டுள்ளது. மொழி வாழ்த்து மட்டுமே உள்ளது. பாடத்திட்டக்குழு இதை நீக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இறை வாழ்த்து தனிப்பட்ட எந்த மதத்தையும் போற்றவில்லை. அவையெல்லாம் மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்கும் கருத்துகளைத்தான் முன்வைத்தன. எனவே, தமிழ் புத்தகங்களில் மீண்டும் இறை வாழ்த்து சேர்க்கப்பட வேண்டும்’’ என்றார்.
 

Popular Posts

Recent