இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 19.06.2019

புதன், 19 ஜூன், 2019



திருக்குறள்


அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:220

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

விளக்கம்:

பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

பழமொழி

Perseverance kills the game

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் நின்று கொண்டு இருந்தால் கண்டிப்பாக எழும்பி இடம் கொடுப்பேன்.

2. நம் நாட்டின் பொது சொத்துக்களை காப்பது என் கடமை எனவே என்னாலோ என் நண்பர்களாலோ அழிவு நேராதவாறு காப்பேன்.

பொன்மொழி

உங்கள் கண்முன் உள்ள பணியில் நீங்கள் முழுமையாக , துணிவோடு ஈடுபட்டால் தான் வெற்றியை அடைய முடியும்..

---- சர்.சி.வி.ராமன்

பொது அறிவு

1. பாலைவனச்சோலை என்றழைக்கப்படும் சிகரம் எது?

மவுண்ட் அபு (இதன் பழைய பெயர் அற்புதாஞ்சல், ராஜஸ்தான் மாநிலம்)

2. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம் எது ?

ஆனைமுடி(கேரள மாநிலம்,இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ளது )

English words & meanings

Heal - cause a person to become healthy again. குணமாக்குதல்

Hatch - breaking the egg to bring out the young bird, குஞ்சு பொரித்தல்.

ஆரோக்ய வாழ்வு

வாய்ப்புண்கள் மற்றும் குடல்புண்களை குணமாக்கும் தன்மை மாதுளம்பூவிற்கு உண்டு.

Some important  abbreviations for students

* UPS - Uninterruptible  Power Supply  

*FM - Frequency Modulation

நீதிக்கதை

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?


புதன்

கணிதம் & கையெழுத்து

ஒரு குளத்தில் தினமும் மாலைப்பொழுதில் மத்தியில் ஒரு வாத்தும், அதற்கு முன்பாக இரண்டு வாத்தும், பின்பாக இரண்டு வாத்துமாக நீந்தி மகிழும். ஆக மொத்தம் எத்தனை வாத்துகள் நீந்துகின்றன?

விடை : 5


கையெழுத்துப் பயிற்சி - 2







இன்றைய செய்திகள்

19.06.2019

* தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி டென்மார்க் நாட்டில்  உள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி மக்கள்  விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

* மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2021ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நியூசிலாந்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* உலக கோப்பை கிரிக்கெட் :


Today's Headlines

🌸Avadi the 15th Municipal Corporation in Tamilnadu was announced bythe  Government of Tamil Nadu

 🌸India has the second highest number of Internet users globally.

 🌸 Denmark has the world's oldest flag in the world. 800 th anniversary of this flag was celebrated   by the people happily

 🌸The Women's  World Cup cricket  will  start in New Zealand on January 30, 2021.

 🌸 World Cup Cricket:

Prepared by
Covai women ICT_போதிமரம்
 

Recent