இந்த வலைப்பதிவில் தேடு

01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது!

புதன், 31 ஜூலை, 2019



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.

*தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள்.

*ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது.

*அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கான முறையான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளிவரும்.

*மத்திய அரசு அரசாணை வெளியிட்ட பின், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

*அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent