இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ்2 பாடப்புத்தகத்தில் தமிழ் தொடர்பான தவறான பகுதி நீக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஞாயிறு, 28 ஜூலை, 2019






தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடப்புத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.1 முதல் பிளஸ்2 வரையிலான பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வி துறை மாற்றி அமைத்தது. கடந்த கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ்1 ஆகிய வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள்  மாற்றி அமைக்கப்பட்டு, புத்தகங்களும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பிளஸ்2 ஆங்கில பாடப்புத்தகத்தில் 142ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்றிருந்து.

அதில், தமிழ் கி.மு.300 ஆண்டுகள்  தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு வலுத்தது. 


இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக நமது தாய்மொழி தமிழ் விளங்குகிறது. பிளஸ்2 பாடப்புத்தகத்தில் தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தம் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இந்நிலையில் ெதால்லியல் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ஆவடியில் அளித்த  பேட்டியில், ‘‘12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையான மொழி என்று இடம்பெற்றுள்ள  தகவல் தவறானது.  திருவள்ளூர் அருகே அதிரம்பாக்கத்தில்   3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற சான்றுகள் உள்ள நிலையில் தமிழ் வெறும் 2300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என கூறமுடியாது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை  எடுப்படும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent