இந்த வலைப்பதிவில் தேடு

5ம் வகுப்பு பாட புத்தகத்தில் தவறான தகவல்: மாணவர்கள் குழப்பம்

சனி, 6 ஜூலை, 2019



5ம் வகுப்பு பாட புத்தகத்தில் பருவ காலம் பற்றிய தகவல் தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு  அரசு பாடநூல் தயாரிப்பதற்காக குழு அமைத்து அதனை மேற்பார்வையிடவும்  குழுவினரை நியமித்து பாடநூல்களை தயாரித்து அச்சிட்டு வழங்கியுள்ளது.  இதில்  5ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு  பருவம் 1, தொகுதி 2 பாடபுத்தகத்தில் பருவ நிலை பற்றி தவறாக  குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவகாலங்கள் பற்றி குறிப்பிடும்போது மழைக்காலம்  டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, முன்பனிக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை,  பின்பனிக்காலம் அக்டோபர் முதல் நவம்பர் வரை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பருவகாலங்களை  பொறுத்தவரை மழைக்காலம் என்பது ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையும்,  முன்பனிக்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையும், பின்பனிக்காலம் பிப்ரவரி  முதல் ஏப்ரல் வரையும் என இருப்பதற்கு பதிலாக மாதங்களை மாற்றி  அச்சடித்திருப்பதால் மாணவ மாணவிகள் குழப்பம் அடைந்துள்ளனர். பல  பள்ளிகளில் மாணவர்களே இதனை கண்டுபிடித்து ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டபோது  ஆசிரியர்கள் அதனை திருத்தி படிக்க கூறி வருகின்றனர்.
 

Recent