இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களிடம் கணித ஆர்வத்தை தூண்டும் விதமாக கணிதவித்தைகளை செய்து காட்டலாம்

வியாழன், 25 ஜூலை, 2019

நீங்களும் செய்யலாம் கணித வித்தைகள்:-


இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ?

இதை உங்கள் மாணவர்களிடம் செய்து மகிழலாம்.
உங்கள் மாணவர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள்.  அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அதை அப்படியே அடுத்த மாணவருக்கு கொடுக்க சொல்லி அவரை அந்த மூன்று இலக்கத்து அருகில் அதே மூன்று இலக்க எண்களை எழுதச்சொல்லவும். அது இப்போது ஆறு இலக்க எண்ணாக இருக்கும்.

அதாவது உதரணத்திற்கு முதல் மாணவன் எழுதியது 308 என்றால்  308308
அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்க சொல்லுங்கள்.  

ஏழால் வகுபடும் எண்கள் மிகக்குறைவு இந்த எண் ஏழால் மீதமின்றி  வகுபடுமா என்ற சந்தேகம் வேண்டாம்!  அந்த எண்கள் கண்டிப்பாக ஏழால் மீதமின்றி வகுபடும்.
வகுத்ததால் வந்த ஈவை மட்டும் வேறொரு காகிதத்தில் எழுதி வேறு யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாணவருக்கு கொடுக்கச்சொல்லவும்.
அந்த மாணவன் கொடுத்த அந்த எண்களை பதினொன்றால் வகுக்கச்சொல்லுங்கள். (மீதியில்லாமல் வரும்!)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்து மற்றொரு நபரிடம் கொடுக்கச்சொல்லுங்கள் ! அவரை அவ்வெண்களை பதிமூன்றால் வகுக்க்ச்சொல்லுங்கள் !

(கவலைப்படாதீர்கள் இதுவும் மீதிமில்லாமல் வகுபடும் !)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்ததை நீங்கள் வாங்கி முதன்முதலில் மூன்று இலக்கம் எழுதினாரே அவரிடம் கொடுங்கள் !

அவர் முதலில் எந்த மூன்று இலக்க எண்களை எழுதினாரோ அந்த எண்கள் அவர் கைகளில் இருக்கும்...

விளக்கம்:

மூன்று இலக்க எண்: 234

ஆறு இலக்கமாக:   234234

அதை 7 ஆல் வகுக்க: 234234 /7 =

அதன் ஈவு: 33462

அதை 11 ஆல் வகுக்க: 33462 / 11

வரும் ஈவு : 3042

அதை 13 ஆல் வகுக்க 3042 / 13

வரும் ஈவு: 234 ! ஆரம்பத்தில் எழுதிய மூன்றிலக்க எண் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent