இந்த வலைப்பதிவில் தேடு

கேஸ் சிலிண்டரில் வெளியே வரும் கேஸ் மட்டும் எப்படி எரிகிறது.......? உள்ளே உள்ள வாயு ஏன் எரிவதில்லை....?

ஞாயிறு, 28 ஜூலை, 2019





கேஸ் சிலிண்டரில் வெளியே வரும் கேஸ் மட்டும் எப்படி எரிகிறது.......? உள்ளே உள்ள வாயு ஏன் எரிவதில்லை....?

எந்த ஒரு எரிபொருளும் எரிவதற்கு, அது எரிவதற்கான வெப்பநிலை, பிராணவாயு ஆக்சிஜன் மிகவும் அவசியம் ஆகும். கேஸ் சிலிண்டெரில் என்-பியூட்டேன் என்ற எரிபொருள் உள்ளது. சமையல் வாயு பற்றிக் கொள்ளும் வெப்பநிலை 360 டிகிரி செல்சியஸ் ஆகும்.

சிலிண்டரின் உள்ளே அதிக அடர்த்தியில் அடைத்து வைக்கபட்டுள்ள கேஸ், சிலிண்டர் வால்வைத் திறந்ததும், சிலிண்டரைவிட்டு வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்து அடைகிறது. ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 டிகிரிசெல்சியஸ் வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது, 


அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது. சிலிண்டரின் உள்ளே உள்ள
எரிபொருள் எரிவதற்கான ஆக்சிஜன் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும்
இது முற்றிலும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஏன் என்றால் சிலிண்டரின் உள்ளே மிக மிக அதிக அடர்த்தியில் எரிபொருள் அடைக்கபட்டுள்ளது. அதை தாண்டி ஆக்சிஜன் உள்ளே செல்வது சாத்தியம் இல்லாத ஒன்று. 

பொதுவாக, காற்றானது அடர்த்தி அதிகம் உள்ள இடத்திலிருந்து அடர்த்தி குறைவான இடத்திற்கு செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent