இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் இடமாறுதல் தள்ளிவைப்பு

வெள்ளி, 12 ஜூலை, 2019


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை தள்ளி வைக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை, ஜூன், ௨௦ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தாக்கல் செய்த மனு:

ஒரே பள்ளியில், மூன்று ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 


அரசின் நிபந்தனையால், எங்களால் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிபந்தனை, சட்டவிரோதமானது; ஒவ்வொரு ஆண்டும், ஜூன், ஜூலையில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பட்டதாரி ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளி கல்வித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளது.


இவற்றை விசாரித்த, நீதிபதி, வி.பார்த்திபன், ௨௦௧௯ ஜூனில் பிறப்பித்த, பள்ளி கல்வித்துறை உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்தார். கவுன்சிலிங்கை தள்ளி வைக்கும்படி, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கை நிறுத்தம் செய்து, தொடக்ககல்வி இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent