இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : ஆசிரியர் பொதுமாறுதலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி???

வெள்ளி, 26 ஜூலை, 2019



தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு பற்றி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி ஆனது. ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறிய மதுரை கே.கே. ஆர். ரமேஷ் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...

 தற்போது முக்கிய செய்தி என்று ஒன்று வந்து கொண்டு இருக்கிறது ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக அது தவறு...*


*ஏனெனில் அதை விசாரித்த நீதியரசர் தற்போது விடுப்பில் உள்ளார் வரும் செவ்வாய் 30.07.2019 அன்று தான் வழக்கு விசாரணைக்கு வருகிறார் அது போக இப்போது தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு நடந்துள்ளது அது குறித்து விசாரிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2019-20 ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது....*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent