இந்த வலைப்பதிவில் தேடு

நமது அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நாள்தோறும் அடையும் துயரம்....?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019




மே மாதம் லீவு முடிந்து, பள்ளி திறக்க..!

மாணவனை சேர்க்க நமது ஆசிரியரும், ஆர்வமாய் காத்திருக்க..!

Matric பள்ளிகளோ...? முன்னரே மாணவணை அள்ளிச் சென்று விட..!

மிச்சமிருந்த மாணவனை, அரசாங்கம் RTE-ல் அனுப்பி விட..!                    

மேற்கண்ட தூண்டிலில் இருந்து சிக்காத ஏழை மாணவனோ..? அரசுப்பள்ளியில் சேர..!

சேர்க்கை ஏன் குறைந்ததென்று, அரசு கேட்க..!    
  
முதல் நாளே, புத்தகத்தை கொடுத்து விட வேண்டும் என்று அரசு சொல்ல..!

வந்திருந்த பாதி புத்தகத்தை கொடுத்து விட..!

வராத புத்தகத்திற்கோ Print-Out எடுத்து, பாடம் நடத்த..!

மீதமுள்ள நோட்டுப்புத்தகம் சொச்சம் வந்ததென்று message-ம் வர..!

அதை எடுக்க ஓடி செல்ல..!

மறுநாளே, school bag-ன்னு msg வர..!

அதை எடுத்து ஓடி வர..!  

Laptop-ம் வந்ததென்று, BRTE போனில் சொல்லி விட..!


ஜூன் மாதம் இப்படியே பாதி ஜூட்விட்டு ஓடி விட..!
                                  
ஜூலைதான் Team Visit என்ற தீ ஜூவாலையோடு, எரிந்து வர..!          

Information-ல், தினந்தோறும் check listம் வர..!

Attendance app தினமும், வட்டமடித்து உலகைச்சுற்ற..!

Emis முடிக்கவில்லை என்று listம் வர..!  

நடுவிலே ஊசி போட நர்ஸ் வர..!

ஊசி போட்ட குழந்தைக்கு காய்ச்சல் வர..!

அவனுக்கோ...? மாத்திரை கொடுத்து படுக்க வைக்க..!

சத்துணவு message, வரவில்லையென்று போனும் வர..!

Brte-யோ list-டோடு ஓடி வந்து, மளிகைச்சாமான் list போல வாசிக்க..!

அதைக்கேட்டு நம் நெஞ்சம், பதபதைக்க..!

காலநிலை அட்டவணை  போட வேண்டுமென்றார்..!

ஆரோக்கிய சக்கரமும் சுழற்றிட வேண்டுமென்றார்..!

Group card-ம் செய்திட வேண்டுமென்றார்..!

கம்பிப்பந்தலிலே படமும்தான் தொங்கிட வேண்டுமென்றார்..!

கீழ்மட்ட கரும்பலகையில் எழுதியிருக்க வேண்டும் என்றார்..!

அதையும் ஆசிரியர்தான் திருத்தியிருக்க வேண்டும் என்றார்..!  

புத்தகப்பூங்கொத்துப் பதிவேடும் வேண்டும் என்றார்..!

TV, DVD பதிவேடும் பேண வேண்டும் என்றார்..!

Slow learner பதிவேடும் போட வேண்டும் என்றார்..!

Mind map-ம் மாணவனே போட்டிட வேண்டும் என்றார்..!

கழிப்பறைதான் சுத்தமாய் இருந்திட வேண்டுமென்றார்..!

Syllabus-ஐ சரியாகப் பின்பற்றிட வேண்டுமென்றார்..!  

Time tableலில் உள்ளபடி, பாடம் நடத்திட வேண்டுமென்றார்..!


பாட இணைச்செயல்பாடும் செய்திட வேண்டுமென்றார்..!

Dictationனும் எழுதிட வேண்டும் என்றார்..!

இரண்டு வரி, நான்கு வரி நோட்டை ஆசிரியரே எழுதித்தர வேண்டுமென்றார்..!

ஒரு பிழையுமில்லாமல் திருத்த வேண்டுமென்றார்..!

Maths kit boxம், science kitம் பயன்படுத்திட வேண்டும் என்றார்..!

Learning outcomes chartஐத் தொங்க விட வேண்டுமென்றார்..!

மாணவனின் L.Oவை சரியாகக் குறித்து வைக்க வேண்டுமென்றார்..!

TLM வைத்துத்தான் பாடம் நடத்திட வேண்டுமென்றார்..!

இத்தனை செய்தும் மாணவர்கள் வாசிப்பில் எழுதுதலில் குறையிருந்தால் C  & D கிரேடுதான் போட்டிடுவார் என்றார்..!    

விளக்கமும் கேட்டிடுவார் என்று சொல்ல..!                          

இத்தனையும் செய்திட நேரமேது என்று நானும் கேட்டு நிற்க..!

மேலிடத்தில் சொன்னதை நான் சொல்லிவிட்டேன்..!

மற்றதெல்லாம் உங்கள் பாடு என்று தான் நழுவிக்கொள்ள..!                        

சனி-ஞாயிறு உட்கார்ந்து TLM செய்ய..!

எங்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் உட்கார்ந்து நாங்களும் homework செய்ய..!

அதைக்கண்டு அவர்களும் ஏளனம் செய்ய..!

அதற்குள்ளே training messageம் வர..!

Test வைக்க நேரமில்லை..!

Fa(b) எப்படிப்போட? என்று BRTE-யுடம் கேட்க..!

ஏனிந்த வேலைக்கு வந்தோமென்று, உள்ளம் நோக..!

BP, Sugar & Ulcerம் வந்து உடலில் அண்ட..!

பள்ளியையே
கட்டிக்கொண்டு அழு என்று வீட்டிலுள்ளோர் வசைபாட..!
                      
இப்படி நாள்தோறும் நமது ஆசிரியப் பெருமக்கள் படும் துயரமோ..? சொல்லொண்ணாததே..!!

என அனைத்து வாட்சப் குழுக்களில் உலவி வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent