நாம் அனைவரும் பயன்படுத்திய ரப்பர், அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத ரப்பர் அந்த சிவப்பு, நீலநிறம் கலந்து பென்சில், பேனா இரண்டும் அழிக்க பயன்படும் என விற்கப்பட்ட ரப்பர்.
பெரும்பாலும் அனைவரது பென்சில் பாக்ஸிலும் இருக்கும் இந்த ரப்பர் சிவப்பு புறம் மட்டும் பயன்படும், தேய்மானமும் இருக்கும். ஏனெனில், நீலநிற ரப்பர் பகுதி மிக கடுமையாக இருக்கும், பேப்பரையும் பல சமயத்ததில் கிழிக்கும். உண்மையில் இந்த ரப்பரை வைத்து நமது குழந்தை பருவத்தில் பெரும் பூசணிக்காயை டிப்பன் பாக்ஸில் மறைத்திருக்கிறார்கள்...
என்ன சொன்னங்க???
நாம் பள்ளியில் படிக்கும் போது, சிவப்பு / ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அந்த மென்மையான பகுதி பென்சிலில் எழுதியதை அழிக்கவும், நீலநிறத்தில் இருக்கும் ரப்பர் பகுதி இன்க் பேனாவில் எழுதியதை அழிக்கவும் என்று தானே
மெய்யாலுமே அதுக்கு இல்லையாம்...
ஆனால், நீலநிறத்தில் இருக்கும் ரப்பரும் பென்சிலில் எழுதியதை அழிப்பதற்கு தானாம். ஆம், கடினமான காகிதங்களில் எழுதும் போது, சிவப்பு பகுதி ரப்பர் சரியாக அழிக்காது. அதனால் தான் நீல நிறத்தில் கடினமான இப்படி சேர்த்து தயாரிக்கப்பட்டதாம்.
சிவப்பு பகுதி?
நாம் பொதுவாக பள்ளி, கல்லூரியில் பயன்படுத்தும் நோட்டின் காகிதங்கள் மென்மையாக இருக்கும் அதை அழிக்க தான் மென்மையான தன்மை கொண்ட சிவப்பு நிற ரப்பர் பகுதியாம். காகிதம் சேதமாகாமல் இருக்க தான் அந்த சிவப்பு பகுதியும் மென்மையாக தயாரித்துள்ளனர்.
அத்தனையும் பொய்யா?
தேர்வில் நாம் எச்சை தொட்டு எல்லாம் அந்த நீலநிற ரப்பர் பயன்படுத்தி எழுத்தை அழிக்க முயன்று பேப்பரை கிழித்து, மாஸ்டரிடம் அடி, திட்டு, உதை வாங்கியது எல்லாம் ஒரு பொய்யை நம்பி தானா?
Rapper story super
பதிலளிநீக்கு