இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியை இடமாற்றத்தால் அதிர்ச்சி; கண்ணீர் விட்டு கதறி அழுத மாணவிகள்

சனி, 31 ஆகஸ்ட், 2019



தண்டராம்பட்டு அரசு பள்ளி ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், அவரை சூழ்ந்துகொண்டு கதறி அழுதனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளது. இவற்றில் 942 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி அறிவியல் ஆசிரியை கவிதா (30). இவர் கடந்த 17.12.2012 முதல் பணியாற்றி வருகிறது. 6 முதல் 10ம் வகுப்பு வரை 516 மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி வருகிறார்.

மாணவிகளிடம் அன்பாகவும், பாசத்துடனும் சிறப்பு வகுப்புகள் எடுத்து அவர்களை சிறந்த முறையில் படிப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதனால் மாணவிகளும், ஆசிரியை என்பதை விட தோழிபோல் பாசத்துடன் பழகியுள்ளனர். இந்நிலையில், பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் வருகைக்கு ஏற்ப ஆசிரியர்களை மாறுதல் செய்ய வேண்டுமென்றும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசு  உத்தரவிட்டது. இதனால் திருவண்ணாமலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கவிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதையறிந்த மாணவிகள் நேற்று ஒன்றுகூடி ஆசிரியை கவிதா, இதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கூறி கதறி அழுதனர். இதையறிந்த தலைமை ஆசிரியை திலகம், அந்த மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், நமது பள்ளியில் மாணவிகள் குறைவாக உள்ளதால் அதிகம் மாணவிகள் இருக்கக்கூடிய பள்ளிக்கு மாறுதல் செய்வது பள்ளிக்கல்வித்துறையின் கடமை. எனவே, நீங்கள் ஆசிரியயை அன்புடன் வழியனுப்ப வேண்டும் என்றார். என்றாலும் ஆசிரியை கவிதாவை சூழ்ந்து கொண்டு மாணவிகள் பலர் கதறி அழுதனர். நீண்ட நேர பாசப்போராட்டத்திற்கு பிறகு மாணவிகள் ஆசிரியை கவிதாவை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent