இந்த வலைப்பதிவில் தேடு

செகண்ட்ஹேண்டு போனைவிட 'புதுப்பிக்கப்பட்ட மொபைல்' பெட்டர். ஏன்?

திங்கள், 12 ஆகஸ்ட், 2019



ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. புதிய மொபைல்களுக்கான சந்தையின் வளர்ச்சி ஒருபக்கம் இருக்க, Refurbished எனப்படும் புதுப்பிக்கப்பட்ட மொபைல்களுக்கான சந்தையும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. புதுப்பிக்கப்பட்ட மொபைல்களை வாங்குவது பாதுகாப்பானதுதானா?

ஒரு புதிய மொபைலின் செயல்திறன் எப்படி இருக்குமோ, அதே நிலைக்குப் பழைய மொபைல்போன் கொண்டு வரப்படுகிறது. மொபைலுக்கான அக்சஸரீஸ்களும் சோதனை செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகின்றன. புதுப்பிக்கப்பட்ட மொபைல்களை வாங்குவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கவே செய்கிறது. உள்ளூர் சந்தையில் கிடைக்கும் செகண்ட்ஹேண்டு போன்கள் ஒருவரிடமிருந்து பெறப்பட்டு அப்படியே விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள் இந்த விஷயத்தில் முற்றிலும் வேறுவிதமாகக் கையாளப்படுகிறது.



வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு பழைய போனும் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பேட்டரி, டிஸ்ப்ளே, கேமரா, மற்றும் பட்டன்கள் ஆகியவற்றின் மேல் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மொபைலில் ஏதாவது பழுதுபட்ட பாகங்கள் இருந்தால் அவை மாற்றப்படுகின்றன. அடுத்ததாக, உள்ளே இருக்கும் டேட்டா அனைத்தும் அழிக்கப்பட்டு வேறு ஏதாவது பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கிறதா என்பது சோதிக்கப்படுகிறது. ஒரு புதிய மொபைலின் செயல்திறன் எப்படி இருக்குமோ, அதே நிலைக்குப் பழைய மொபைல் போன் கொண்டு வரப்படுகிறது. மொபைலுக்கான அக்சஸரீஸ்களும் சோதனை செய்யப்படுகின்றன. பின்னர் அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள், செகண்ட்ஹேண்டு போன்கள் போல இல்லாமல், புதிய மொபைல்களைப் போன்றே பேக் செய்யப்பட்டு அதற்கேற்ற அக்சஸரீஸ்களுடன் கிடைக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட மொபைல்களை விற்பனை செய்வதற்கென்றே ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் தனியாக இணையதளங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் தொடங்கி 50,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் புதுப்பிக்கப்பட்ட மொபைல்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

செகண்ட்ஹேண்டு போனைவிட 'புதுப்பிக்கப்பட்ட மொபைல்' பெட்டர். ஏன்?
புதிய மொபைல்களுடன் ஒப்பிடும்போது சராசரியாக 30 முதல் 35% வரை குறைந்த விலையில் இந்த புதுப்பிக்கப்பட்டப் போன்கள் கிடைக்கின்றன. செகண்ட்ஹேண்டு மொபைல்களுடன் ஒப்பிடும் போது இவற்றில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் இந்த மொபைல்களுக்கும் 6 முதல் 12 மாதம் வரை வாரன்டி வழங்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்பதால், இவற்றை வாங்கிப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent