விதி 8. தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை...
(1) (அ) அரசுப் பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாகத் தன்னை ஈடுபடுத்தவோ ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது.
இருப்பினும், அரசுப் பணியாளர் ஒருவர் அத்தகைய அனுமதி ஆணையின்றி தனது அலுவலகப் பணிகளுக்கு அதன் மூலம் ஊறு விளையாது என்ற வரையறைக்குபட்டு ஒரு சமூக அல்லது அற இயல்புடைய மதிப்புறு வேலை அல்லது இலக்கியம் கலைத்திறன் அல்லது அறிவியல் தன்மையிலான பணியை எப்பொழுதாவது மேற்கொள்ளலாம் அல்லது பிழைப்புக்காக அன்றி பொழுது போக்காகப் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கலாம். ஆனால் அந்த பணியை மேற்கொள்ளக்கூடாது என அரசினால் கட்டளையிட்டால் அவர் அப்பணியை மேற்கொள்ளக் கூடாது அல்லது விட்டுவிட வேண்டும்.
மேலும் இந்த உள் விதியில் அடங்கியது எதுவும் ஓர் அலுவலக அமைப்பில் அல்லது அலுவல் சார்பற்ற அமைப்பின் அல்லது அமைப்பொன்றின் ஓர் உறுப்பினராக ஆளுநரால் நியமனம் செய்யப்பெற்ற அல்லது தான் வகித்து வரும் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர் பதவித் தகுதியின் காரணமாகப் பல்கலைக்கழகக் குழுவின் ஓர் உறுப்பினராவதற்குத் தேர்தலில் நிற்கும் அரசுப் பணியாளர் ஒருவர் அத்தகைய உறுப்பினர் என்ற முறையில் அவரது கடமைகளை மேற்கொள்ளுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் அரசின் முன் அனுமதி பெற வேண்டுமென்று கருதப்படமாட்டார்.
விளக்கம்:-
இரண்டாவது காப்புரையின் நோக்கத்திற்காக ‘ஆசிரியர்” என்ற சொல்லானது உரிய பல்கலைக்கழகத்தை நிறுவிய சட்டத்தில் அதற்களிக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.
ஒரு பல்கலைக்கழகக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் உறுப்பினராவதற்கு அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் ஆணையொன்றினைத் துறைத்தலைவர் பிறப்பித்திருக்கும்போது, அரசானது அத்தகைய ஆணையை மாற்றியமைப்பதற்கு அதிகாரம் கொண்டிருக்கும்.
ஒரு பல்கலைக் கழகக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் உறுப்பினராவதற்கு அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் ஆணையொன்றினை துறைத்தலைவர் பிறப்பித்திருக்கும்போது, அரசானது அத்தகைய ஆணையை மாற்றியமைப்பதற்கு அதிகாரம் கொண்டிருக்கும்.
இருப்பினும் இந்து சமய அறக்கட்டளை (ஆட்சி) துறையின் ஆய்வாளர்களும் செயல் அலுவலர்களும் அத்தகையஒப்பளிப்பின்றி இந்து சமய அறக்கட்டளைத் (ஆட்சி) துறை ஆணையரின் கட்டளைப்படி, எதிர்பாராதவாறு ஏற்படும் காலியிடத்தை நிறைவு செய்வது ஆட்சி முறையில் இன்றியமையாததாக அமையும்போது சமய ஈடுபாடுள்ள நிறுவனமொன்றின் அறங்காவலர் ஒருவரது அலுவல்களை நிறைவேற்றுவதற்காக ‘அறங்காவலராக” அல்லது ‘இடைக்கால அறங்காவலராக” அல்லது ‘தக்கராக” குறுகிய (ம) தற்காலிக காலங்களுக்கு நியமிக்கப்படலாம்.
இருப்பினும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம். இந்தியாவிலுள்ள பிற மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், தமிழ்நாடு அரசுத் தொழில்நுட்பக்கல்வி - பயிற்சித் தேர்வுக்குழுமம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றிற்கு தேர்வாளர் குழுமத்தலைவராக அல்லது உறுப்பினராக அல்லது வினாத்தாள் தயாரிப்பாளராக நியமனம் செய்யப்படுவதை ஏற்பதற்கு அனுமதி பெறத் தேவையில்லை. மற்ற அனைத்து நிறுவனங்களிலும் தேர்வாளர் குழுமம் தலைவராக அல்லது உறுப்பினராக அல்லது வினாத்தாள் தயாரிப்பாளராக அரசுப் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ள தம் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் துறைத்தலைவர்களைப் பொறுத்த வரையில் அரசுச் செயலாளரும், தம் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அலுவலர்களைப் பொறுத்த வரையில் துறைத்தலைவரும், அடிப்படை விதிகள் 11- இன் காப்புரைகளுக்கிணங்க நியமனம் பெறுவதனை அனுமதிக்கலாம். இருந்த போதிலும் அரசுப்பணியாளர் ஒருவருக்கே ஒரே நிறுவனத்தால் ஐந்து முறைகளுக்கு மேற்பட்டவாறு தொடர்ச்சியாக நியமனம் அளிக்கப்படுமிடத்து, அரசுப்பணியாளர் அத்தகைய நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அது குறித்து முன் ஏற்புப் பெறுவதற்காக அரசுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
இருப்பினும், பள்ளிகள், கல்லூரிகள், பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் மற்றும் ஏதேனும் கல்வி நிலையங்களில் மாணவர்களுடைய மருத்துவ ஆய்வுக்காக உரிய நிறுவனத் தலைவர்களிடமிருந்து வேண்டுகோள்கள் வருகின்றபோதெல்லாம் அத்தகைய மருத்தவ ஆய்வுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், கீழ்காணும் வரையறைகளுக்குட்பட்டு மாவட்ட மருத்துவ அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் பணிபுரியும் தமிழ்நாடு மருத்துவப் பணித் தொகுதியைச்சார்ந்த மருத்துவ அலுவலர்களுக்கு (தற்காலிக முறையில் பணியாற்றும் அலுவலர்கள் உட்பட) அனுமதி வழங்கலாம்.
(i) அவ்வாறு நடத்தப்பெறும் மருத்துவ ஆய்வுகள் இயல்பான அலுவல் பணிகளுக்கு ஊறு பயக்கும் முறையில் அமைதல் கூடாது.
(ii) அரசுக்குக் கூடுதல் செலவு எதுவும் அமையக்கூடாது.
(iii) மருத்துவ அலுவலரால் பெறப்படும் மொத்த ஊதியமானது ஆண்டொன்றில் ரூ.25,000/-க்கு மேற்படக்கூடாது. (Substituted vide G.O.Ms.No.39, P&AR (A) Department, dated 09.03.2010)
விளக்கம் (அ) நீக்கப்பட்டது.
(அ) (அ) இவ்விதியின் கூறு (அ)-இல் உள்ள எதுவும் எப்படியிருந்தபோதிலும் அரசுப்பணியாளர் எவரும் பகுதிநேரப் பணி எதையும் மேற்கொள்ளக் கூடாது.
இருப்பினும், அரசுப்பணியாளர், அரசின் முன் அனுமதியுடன் அரசு, அரசுச் சார் அல்லது அரசு உதவிபெறும் கல்வி அல்லது தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக் கழகங்களில் ஒரு தறுவாயில் ஓராண்டுக்கு மேற்படாத கால அளவுக்கு விரிவுரையாற்றும் பணியினை மேற்கொள்ளலாம்.
(அரசாணை எண். 35 ப.ம.நி.சீ (ஏ) துறை நாள். 11.12.1997-ல் சேர்க்கப்பட்டுள்ளது)
(அ) அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும், தன்னுடைய குடும்ப உறுப்பினர் எவரேனும் வணிகம் அல்லது தொழிலில் ஈடுபட்டால் அல்லது ஈட்டுறுதி முகமை அல்லது தரகுமுகமையைச் சொந்தமாகக் கொண்டிருந்தால் அல்லது நிருவகித்து வந்தால் அதுபற்றி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், அரசு பணியாளருடைய குடும்ப உறுப்பினர் ஈடுபடும் வணிகம் அல்லது தொழிலானது அரசுக்கு அல்லது அரசுப் பணியாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதெனத் தெரியவந்தால், அந்த அரசுப் பணியாளர் தன்னுடைய குடும்ப உறுப்பினரை, கேள்விக்கு ஆளான அவ்வணிகம் அல்லது தொழிலில் அவருடைய தொடர்பை தொடர அனுமதிக்கக் கூடாது.
விளக்கம்:- தன்னுடைய குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவரால் சொந்தமாகக் கொண்டுள்ள அல்லது நிருவகிக்கப்பட்டு வரும் வணிகம், தொழில், ஈட்டுறுதி முகமை அல்லது தரகு முகமை எதற்கேனும், அரசுப் பணியாளர் ஆதரவு திரட்டுவதானது இந்த உள்விதிகளை மீறுவதாகக் கருதப்படும்.
(2) 1949 ஆம் ஆண்டு வங்கி நிறுமச் சட்டத்தின் (1949 ஆம் ஆண்டு மையச் சட்டம் எண். 10) அல்லது 1913 ஆம் ஆண்டு இந்திய நிறுமங்கள் சட்டத்தின் (1913 - ஆம் ஆண்டு மையச் சட்டம் - 7) அல்லது 1956 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (1956 ஆம் ஆண்டு யைமச் சட்டம்-1) அல்லது இப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன் கீழேனும் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வங்கியின் அல்லது நிறுமத்தின் பதிவில், முன்னேற்றத்தல் அல்லது மேலாண்மையில் அரசின் முன் அனுமதியின்றி அரசுப் பணியாளர் எவரும் பங்கேற்கக் கூடாது.
இருப்பினும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் எண். 53) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள எந்தவொரு சட்டத்தின் கீழேனும் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் கூட்டுறவுச் சங்கத்தின் அல்லது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம் ( 1860 ஆம் ஆண்டு மையச் சட்டம் எண்.21) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள எந்தச் சட்டத்தின் கீழேனும் பதிவு செய்யப்பட்ட இலக்கிய, அறிவியல் மேலாண்மையில் (7) முதல் (10) வரையிலான உள் விதிகளுக்குட்பட்டு அரசுப் பணியாளர் பங்கேற்கலாம்.
மேலும் அரசுப் பணியாளரின் அலுவலகப் பணியானது இதனால் பாதிக்கப்படக் கூடாது. அவர் நடவடிக்கையில் ஈடுபட்ட நாளிலிருந்து ஒரு திங்கள் கால அளவுக்குள், தமது பங்கின் தன்மை குறித்த விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
(3) (அ) அரசுப் பணியாளர் ஒருவர், நடுவர் ஒருவரை நியமிக்கும் அதிகாரமுடைய நீதிமன்றம் ஒன்றினால் நடுவராகப் பணிபுரியுமாறு கட்டளையிடப்பட்டாலன்றி மற்றபடி தனக்கு நேரடியான மேல் அதிகாரியினது ஒப்புதல் இல்லாமல் எந்த வழக்கிலும் நடுவராக பணிபுரிதல் கூடாது.
(ஆ) அரசு பணியாளர் எவரும் தான் வகிக்ககூடிய ஏதேனும் நீதி அல்லது செயலாட்சித் துறைப் பதவியின் காரணமாகத் தன்னிடத்தில் ஏதேனும் ஒருமுறையில் வரக்கூடிய ஏதேனும் வழக்கில் தான் ஒரு நடுவராகப் பணிபுரிதல் கூடாது.
(இ) அரசுப் பணியாளர் ஒருவர் தகராறு உள்ளவர்களிடையே அவர்களின் தனிப்பட்ட வேண்டுக்கோளின் மீது நடுவராகப் பணிபுரிந்தால் அவர் எத்தகைய கட்டணத்தையும் பெறுதல் கூடாது.
(ஈ) அவர் நீதிமன்றமொன்றின் நியமனத்தின்படி பணிபுரிந்தால் அடிப்படை விதகிள் 46,47 ஆகியவற்றின் கீழ்ப்பட்ட துணை விதி 4-ல் அடங்கியது எவ்வாறிருப்பினும் நீதிமன்றம் அறுதியிடும் அத்தகைய கட்டணத்தை அவர் பெறலாம்.
(4) (அ) அரசுப் பணியாளர் அரசின் அனுமதியின்றி எந்த நூலையும் வெளியிடவோ அல்லது இலக்கியம் அல்லது கலைத்திறன் குறித்த பணி எதுவாயினும் அதனில் வழக்கமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ கூடாது.
இருப்பினும், அரசுப் பணியாளர் ஒருவர் தன்னுடைய நேரத்தையும் பதவி நிலையையும், தன் புத்தக விற்பனை மேம்பாட்டிற்காக பயன்படுத்தமாட்டார் என்பதற்கும் அத்தகைய புத்தகங்கள் அரசியல் நோக்கம், எதிர்ப்புக்குரிய பகுதிகள், அரசின் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் ஆகியவற்றினைக் கொண்டிருக்கவில்லை என்ற வரையறைக்கும் உட்பட்டு உயர்நிலை அதிகாரியினுடைய முன் அனுமதியின்றி இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைi, கவிதை ஆகியவை பற்றிய நூல்களை எப்பொழுதேனும் வெளியிடலாம்.
(ஆ) நூல் ஒன்றை வெளியிடுவதற்குரிய அனுமதியானது அரசுப் பணியாளர் தன் நேரத்தையும், தன் அலுவல் முறைச் செல்வாக்கையும் நூல் படிகளின் விற்பனை மேம்பாட்டிற்காக பயன்படுத்தமாட்டார் என்று வரையறைக்குட்பட்டு நடைமுறையில் வழங்கப்படும்.
இருப்பினும், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் யாவற்றிலுமுள்ள ஆசிரியர் அல்லது கல்விசார் பணியாளர் எவரும், தன்னுடைய நேரத்தையும் அலுவல் முறை செல்வாக்கையும் கட்டுரைகளின் அல்லது புத்தகங்களின் விற்பனையை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது எனும் வரையறைக்கும், அவ்வெளியீடுகள் அரசின் எந்தச் சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் தொடர்புடையதாகாது என்றும் மற்றும் கூறு (ஈ) இன் காப்புரைகள் அவ்வெளியீட்டாளருக்கு பொருந்தாது எனும் வரையறைக்குட்பட்டு, தன்னுடைய மேலலுவலரின் அனுமதியின்றி தொழில்முறை மற்றும் கல்விசார் பொருள்களில் நூல்களை வெளியிடலாம்.
(இ) கல்வி நிறுவனங்களது பயன்பாட்டிற்குரிய பாடநூல்கள் நீங்கலாக பிற தேர்வுகளில் எல்லாம், வெளியீட்டாளர்களிடமிருந்து ‘பங்குவீத உரிமை அடிப்படையில்” ஊதியம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படும். பாடநூல்களைப் பொறுத்த நேர்வில், அரசுப் பணியாளர் நூல் படிகளின் விற்பனையில் எத்தகைய ஈடுபாடும் கொள்ளக்கூடாது மற்றும் வெளியீட்டாளரிடமிருந்து ஊதியமாக ஒரு மொத்தத் தொகையை மட்டுமே அவர் பெறுவதற்குமான வரையறைக்குட்பட்டு ஊதியம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படும்.
இருப்பினும், தொழில் மற்றும் கல்விசார் பொருள்களில் நூல்கள் இயற்றும் அரசின் அனைத்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கற்பிப்பு அல்லது கல்விசார் பணியாளர் எவரும் அந்நூல்கள் பாடநூல்களாகவோ பொது நூல்களாகவோ இருப்பினும் பங்கு வீத உரிமை அடிப்படையில் மதிப்பூதியம் பெறலாம்.
இருப்பினும் இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை ஆகியன குறித்து நூல்கள் எழுதும் அரசுப் பணியாளர் ஒருவர் வெளியீட்டாளரிடமிருந்து அவர் பெறும் ஊதியத்தை பற்றிக் குறிப்பிடப்பட்ட அதிகாரிக்கு உடன் தெரிவிக்க வேண்டும்.
விளக்கம்:- ஒரு புத்தகமானது பாடநூலா அல்லது பொதுநூலா எனத் தீர்மானிப்பதற்கு. தொடக்க மற்றம் இடைநிலைப் பள்ளிகளுக்கான பாடநூல்களைப் பொறுத்த வரையில் அவை பள்ளிப் பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டு பாடநூல் குழுவுக்கு ஏற்புக்கு அனுப்பி வைக்கப்பட்டவையா என்பதையும், கல்லூரிகளுக்கான பாடநூல்களை பொறுத்தவரையில் அவை பல்கலைக்கழக பாடதிட்டத்தின்படி எழுதப்பட்டு ஏற்புக்காக உரிய பல்கலைக்கழகக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவையா என்பதையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்படகூடிய பொது நூல் எதுவும் இப்பிரிவு கூறின் நோக்கங்களுக்காக பின்னர் பாடநூலாகக் கருதப்படக் கூடாது.
(ஈ) அரசுப் பணியாளர், அரசின் சட்டங்கள் அல்லது கொள்கைகள் குறித்ததொரு நூலை வெளியிடுவதற்குரிய அனுமதிக்காக அரசுக்கு விண்ணப்பிக்கும்போது அதன் கையெழுத்துப்படியை கூர்ந்தாய்வு செய்வதற்காக அதனை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
(உ) பாடநூல் குழுவில் உறுப்பினராக உள்ள அரசுப் பணியாளர் எவரும் அக்குழுவில் அவர் உறுப்பினராக உள்ள காலத்தில் ஏற்பளிக்கபெற்ற பள்ளியின் பயன்பாட்டிற்காக எந்த பாடநூலையும் எழுதவோ, பதிப்பிக்கவோ கூடாது.
விளக்கம்:- ஏற்பளிக்கப்பட்ட பள்ளி என்பது அரசால் பராமரிக்கப்படும் அல்லது அரசின் ஏற்புடன் தொடங்கப்பட்ட அல்லது தமிழ்நாடு கல்வி விதிகளின் கீழ் அல்லது 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொடக்கக்கல்விச் சட்டத்தின் (1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் எண். VIII) கீழ் இயற்றப்பட்ட விதிகளின்கீழ் ஏற்பு அளிக்கப்பட்ட பள்ளியியை குறிப்பிடுவதாகும்.
(5) சுற்றுப் பயணம் புரியும் அலுவலராக உள்ள அரசுப் பணியாளர் அரசின் முன் அனுமதியின்றி அவரது சீருந்தினை ஒட்டுவதற்காக, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளரை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் அத்தகைய அலுவலக உதவியாளருக்கும் இடையே அமைந்ததொரு தனிப்பட்ட ஈடுபாடாக இருக்கும். மேலும் அது அத்தகைய அலுவலக உதவியாளரின் இயல்பான அலுவல் பணியின் பகுதியாகவோ, இயல்பான பணிக்கு எவ்வகையிலும் குறுக்கீடாகவோ இருக்கக்கூடாது.
விளக்கம்:- இந்த துணை விதியானது சென்னை மாநகருக்கு வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டிய பணியினை உள்ளடக்கிய சென்னையில் அலுவலகத்தைக் கொண்டுள்ள அலுவலர்களுக்கும் பொருந்தும்.
(6) பண வரவை அல்லது செலவை உள்ளடக்கிய கொள்முதல் செய்தலை அல்லது தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஓர் அலுவலர் அரசுப்பணியாளரை அல்லது தமிழ்நாடு கடைநிலைப் பணியிலுள்ளவரை ஈடுபடுத்துதல் மிகவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதலையும் பணம் மறித்தலையும் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளிலும் நிலையான கண்காணிப்பு தேவைப்படக்கூடியதாக இருப்பினும், தனக்கு ஊர்தி வசதி செய்து தருவதில் அல்லது தேவையானவற்றை வழங்குவதில் அரசு பணியாளர் ஒருவரை அல்லது தமிழ்நாடு கடைநிலை பணியிலுள்ளவரை அலுவலர் பயன்படுத்திக் கொள்வதை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது.
(7) மருத்துவ அலுவலர் எவரும் தன் பெயரிலோ, தன்னுடைய மனைவியின் பெயரிலோ தன்னை சார்ந்து வாழ்வோரது பெயரிலோ தனிப்பட்ட மருத்துவ இல்லம், மருத்துவமனை மருத்துவ ஆராய்வகம் அல்லது அதுபோன்ற அமைப்பு ஒன்றை நடத்தவோ அதில் ஏதேனும் பண தொடர்பானதொரு ஈடுபாடு கொள்ளவோ கூடாது. மேலும் அவர் தன் சொந்த இல்லத்தில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் வழக்கமாக இடவசதி அளித்தல் கூடாது. ஆயினும், அவர் தனியார் மருத்துவமனையொன்றில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், அந்த மருத்துவமனையானது அவருக்குரிய நோயாளர்களை அனுமதிப்பதற்காக ஒதுக்கப் பெற்றிருக்காமலும், பதிவு பெற்ற மருத்துவத் தொழில் புரிகின்ற எவரது நோயாளர்களையும் அனுமதிப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
(8) அரசு பணியாளர் எவரும் ஏதேனும் நிறுவனம், பரஸ்பர நலச்சங்கம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் சம்பளம் பெறும் ஒரு வேலையை ஏற்று கொள்ளவோ அல்லது ஏதேனும் ஆயுள் ஈட்டுறுதி நிறுவனத்திற்கு அல்லது சங்கத்திற்கு சம்பளம் அல்லது தரகு மூலம் பணம் பெறும் ஒரு முகவராகப் பணிபுரியவோ கூடாது.
இருப்பினும், அரசுப் பணியாளர் ஒருவர் அவரது துறைத் தலைவருடைய ஒப்பளிப்பு மற்றம் அத்தகைய துறை தலைவரிடமிருந்து அவர் மேற்கொண்டுள்ள பணியானது அவருடைய அலுவலகப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்றப்படும் என்றும் அத்தகைய அரசுப் பணியாளர் எத்தகைய ஊதியமும் பெறமாட்டார் என்றும் உரியவாறான சான்றிதழ் ஆகியவற்றை முதற்கண் பெற்றிருந்தால் பரஸ்பர நலச்சங்கத்தின் மேலாண்மையில் பங்கு கொள்ளலாம்.
(9) எல்லா வகையான அரசுப் பணியாளர்களும் கூட்டுறவு சங்கங்களது மேம்பாட்டில் பங்கு கொள்ள உரிமை உடையவர்களாவர். ஆனால் அரசுப்பணியாளர் எவரும் அரசின் அனுமதி ஆணi பெற்றாலன்றி மற்றப்படி அச்சங்கத்தின் பணிகளில் பங்கேற்பதால் அவருடைய அலுவல் பணிகள் தடைபாடர் எனும் நிலை இருந்தாலன்றி முழுவதுமான அரசுப்பணியாளர்களை அல்லது ஒரு பகுதி அரசுப்பணியாளர்களையும் ஒரு பகுதி தல ஆட்சி நிறுவனப் பணியாளர்களையும் உறுப்பினர்களாகப் கொண்டுள்ள எந்த ஒரு கூட்டுறவுச் சங்கத்திலும் பதவி வகிக்கவோ அல்லது அச்சங்கத்தின் நடவடிக்கைககைளை மேலாண்மை செய்வதற்கென அமைக்கப்பட்ட ஏதேனும் குழுவில் பணிபுரியவோ கூடாது. அச்சங்கத்தில் பங்கேற்கும் அரசுப் பணியாளர்கள் அதில் தாம் பங்கேற்ற நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் தமது அப்பங்கு பற்றியும் தமது பங்கின் தன்மை பற்றிய விவரங்களையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இருப்பினும்:-
(i) மீன் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மீன்துறை இயக்குநரின் முன் அனுமதி ஆணையுடன் தம் அலுவலகப் பணிகளுக்கு இடையூறாக அமையாமலும். தனிப்பட்ட ஊதியம் ஏதும் பெறாமலும் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் அலுவலால் செயலாளர்களாகவோ தலைவர்களாகவோ பணிபுரியலாம்.
(ii) கூட்டுறவு துறையில் பணிபுரிபவர்கைளத் தவிர எல்லா வகையான அரசுப் பணியாளர்களும் கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களில் பதிவ வகிக்கவோ அல்லது அதன் நடவடிக்கைகளை மேலாண்மை செய்தவற்கென அமைக்கப்பட்ட ஏதேனும் குழுவில் பணியாற்றவோ செய்யலாம்.
விளக்கம்:- மேலே குறிப்பிடப்பட்ட கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்கள் என்பவை தம்முடைய உறுப்பினர்கட்கு வீடுகள் கட்டுவதனை அல்லது அவர்கள் வீடு கட்டுவதற்காகக் கடன்கள் வழங்குவதனைக் குறிக்கோளாகக் கொண்ட எல்லா வகையான கூட்டுறவுச் சங்கங்களையும் குறிப்பனவாகும்.
(iii) காவல்துறை அலுவலகப் பணியாளர்கள் உரிய காவல் துறை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் தங்களுடைய அலுவலகப் பணிகளுக்கு இடையூறின்றி ஏதேனும் கூட்டுறவுச் சங்கத்தில் பதவி வகிக்கலாம் அல்லது சங்கத்தின் நடவடிக்கைகளை மேலாண்மை செய்தவற்கென அமைக்கப்பட்ட ஏதேனும் குழுவில் பணிபுரியலாம்.
(iv) தொழில்துறை அலுவலர்கள் அவர்களது அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமலும் ஊதியம் பெறாதவாறும் தொழிற்கூட்டுறவுச் சங்கங்களின் மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றுமாறு தொழிற்கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் நியமனம் செய்யப்படும்போது அவர்களுக்கு அரசின் அல்லது அதிகாரி எவரது அனுமதி ஆணை தேவையில்லை.
vஎ) கரும்பு வளர்ச்சி அலுவலர்கள், மாநிலக் கரும்பு வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உரிய வட்டார இணைப்பதிவாளர் பதவி நிலையிலுள்ள வேளாண் துறையைச் சார்;ந்த அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் குழுக்களில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கு அரசின் அல்லது யாரேனும் அதிகாரியின் அனுமதி ஆணை தேவையில்லை.
(vi) அரசுப் பள்ளிகளைச் சார்ந்த பணியாளர்கள் நேர்வுக்கேற்ப பள்ளிகளின் கோட்ட ஆய்வாளர் அல்லது மகளிர் பள்ளிகள் ஆய்வாளரின் முன் அனுமதியுடன் தொடர்புடைய பள்ளி மாணவர் கூட்டுறவு பண்டகசாலையில் அலுவல் பொறுப்பு ஏற்கலாம்.
(10) உள் விதி (8)-இல் குறிப்பிடப்பட்ட ஒப்பளிப்புக்கும் சான்றிதழுக்கும் உட்பட்டவாறு அடிப்படை விதிகள் 46 மற்றும் 47ன் கீழமைந்த துணை விதி (4)-ல் அடங்கியது எதுவாயினும், முழுவதுமாக அரசு பணியாளர்களைக் கொண்ட அல்லது பகுதியாக அரசு பணியாளர்களையும், பகுதியாகத் தல ஆட்சி நிறுவனங்களின் பணியாளர்களையும் கொண்ட அல்லது பகுதியாக அரசுப் பணியாளர்களையும், பகுதியாகஅரசுப் பயிற்சிப் பள்ளிகள் அல்லது கல்லூரிளின் மாணவர்களையும் கொண்டதொரு கூட்டுறவு சங்கத்தில் ஓர் உறுப்பினராக உள்ள அரசுப் பணியாளர் ஒருவர் அச்சங்கத்தின் கணக்குகளை பராமரிப்பதற்காக ஊதியம ;பெற்றுக் கொள்ளளலாம்.
(11) கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அரசுப் பணியாளர்களின் நலனுக்கெனப் பதிவு செய்யப்பெற்ற ஒரு கூட்டுறவு சங்கமானது வங்கியின் மேலாண்மைக் குழுவில் அல்லது ஒன்றியத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறவில்லையெனில் அது கூட்டுறவு மைய வங்கி ஒன்றில் அல்லது ஒரு தணிக்கை அல்லது மேற்பார்வை செய்யும் ஒன்றியமொன்றில் உறுப்பினராகலாம்.
(12) துறைத்தலைவர்கள் அவரவர் துறைகளில் பணியாற்றும் அரசுப் பணியாளர்களை பொறுத்து அரசு பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ள கூட்டங்கள், கரத்தரங்குகள் மற்றும் குழுக்களில் கலந்து கொள அனுமதிக்கலாம்.
(13) அரசுப் பணியாளர் எவரும் தரகு பிடிப்பாளர் (விரவ) ஒருவடைய நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது.
விளக்கம்:- மேலே குறிப்பிடப்பட்ட உள்விதியில் ‘ தரகு பிடிப்பாளர்” என்னும் சொல்லானது 1879ஆம் ஆண்டைய வழக்குரைஞர்களது சட்டத்தின் மையச்சட்டம் XVIII 1879-இன் பிரிவு 3-ல் உள்ள பொருளையே கொண்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக