இந்த வலைப்பதிவில் தேடு

நடுரோட்டில் கேக் வெட்டி மாணவர்கள் கொண்டாட்டம்: தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல்

சனி, 3 ஆகஸ்ட், 2019





கும்பகோணம் அருகே சாலையை மறித்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதை தட்டி கேட்ட ஆசிரியரை, பிளஸ்2 மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆண்டலாம்பேட்டை மகாஜனக்குடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (35). இவர் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உயிரியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் பள்ளி மாணவர்கள் ஒழுங்கு நடவடிக்கை கண்காணிப்பு குழுவிலும் உள்ளார். 


இந்நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 மாணவர் ஒருவரது  பிறந்த நாளையொட்டி மாலையில் பள்ளி முன்பு 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையை மறித்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். தாளாளர், தலைமை ஆசிரியர் அறிவுறுத்தல்படி கல்யாணசுந்தரம் உட்பட 4 ஆசிரியர்கள் அங்கு சென்று மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். 

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர் கல்யாணசுந்தரத்தை தாக்கி கீழே தள்ளி காலால் மிதித்தனர். அந்த வழியாக வந்த போலீசார், ஆசிரியரை தாக்கிய மாணவர்களை விரட்டியடித்தனர். இதில் காயமடைந்த ஆசிரியர் கல்யாணசுந்தரத்தை மீட்டு கும்பகோணம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent