இந்த வலைப்பதிவில் தேடு

காமராஜர் வீட்டை சுத்தம் செய்யணும்!'- மாணவர்களுக்கு நீதிபதி கொடுத்த தண்டனை

புதன், 14 ஆகஸ்ட், 2019





விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 8 மாணவர்கள் மீது, போதையில் அத்துமீறி கணிப்பொறி ஆய்வகத்துக்கு வந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் அவர்களை 3-ம் ஆண்டு படிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனிடையே, தங்களை அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 8 மாணவர்களும் மனுத்தாக்கல் செய்தனர்

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதி, ``மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், கடைசி ஆண்டில் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பினால் பல்வேறு பாதிப்பு ஏற்படும். மேலும், தவறு செய்த மாணவர்கள் தவற்றை உணர்ந்து உறுதி அளித்துள்ளனர். இதனால் மாணவர்கள் ஆகஸ்ட் 15-ல் விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.


மாலை 4 மணிக்கு மேல் 6 மணி வரை தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதைக் கண்காணிக்க கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர் ஒருவரை கண்காணிக்க உத்தரவிடலாம். மாணவர்கள் இதை பின்பற்றினால் கல்லூரியில் அனுமதிக்கலாம்.

 நீதிமன்றம்
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகஸ்ட் 19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent