தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியிரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகள் பெரும்பாலும், ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படுவதால் ஒருவர் விடுப்பு எடுத்தாலும், மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது என்பதால் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியிடம் பொறுப்பு வழங்கியதன் மூலம் இனி மேல்நிலைப்பள்ளியில் உள்ள கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், விளையாட்டு பயிற்சி, ஆங்கில பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் வகுப்புகள் என்று அனைத்தையும் தொடக்கப்பள்ளி, மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தினால் ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியரை கொண்டு வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதே வேளையில், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அப்படியே தங்கள் பணியை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக