இந்த வலைப்பதிவில் தேடு

ஒரே வளாக தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைப்பு - ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019




அரசு உயர், மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளை இணைக்கும் அரசின் முடிவிற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அரசு உயர், மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கும் 600க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் விடுப்பில் சென்றால் உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். அறிவியல் ஆய்வுகூடத்தை தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களும் பயன்படுத்தலாம்.


இம்முடிவுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ''அரசின் இந்த முடிவு தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக உள்ளது. காலப்போக்கில் தொடக்க கல்வித்துறைக்கு மூடுவிழா காண அரசு முடிவு செய்துவிட்டது. கிராமங்களில் பள்ளிகள் இன்றி பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என சங்க ரீதியாக வலியுறுத்த உள்ளோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent