இந்த வலைப்பதிவில் தேடு

குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த அதிரடி தமிழக அரசு செயல்பாடு சரிதானா?

திங்கள், 12 ஆகஸ்ட், 2019



ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்விக்கு ஒரே வழி அரசுப்பள்ளிகள் தான். சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் அரசு பள்ளிகளுக்கு சமீபகாலமாக ஆபத்து ஏற்பட்டு வருகிறது. பலரும் தனியார் பள்ளிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற காரணத்தை காட்டி, பள்ளிகளை மூடுவது என்ற திட்டம் கொடுமையானது. பல லட்சம் ஏழை குடும்பங்கள் அரசு சேவைகளை நம்பி தான் நம்பிக்கையுடன் இருக்கின்றன. இந்த குழந்தைகள் மற்றவர்களை போல படிக்க அரசை தவிர யார் உதவ முடியும்? தனியார் பள்ளிகள் வளர வழி செய்வது முதல் தவறு. மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருப்பதால் மூடுவதாக சொல்வது அடுத்த தவறு. இதன் விளைவுகளால் ஏழை, நடுத்தர குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும்.

 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்க ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு, அங்கு நூலகத்தை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது சரியல்ல என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட காரணங்களால்  பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எல்லாமே தனியார்மயமாவது ஆபத்து. அதிலும் கல்வியை வர்த்தகமாக்கி, தனியார் வசம் விட்டால் என்னவெல்லாம் ஆபத்து என்பதை இப்போது அனுபவித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலை அரசு பள்ளிகளுக்கு ஏற்படும் என்றால்...? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent