இந்த வலைப்பதிவில் தேடு

வாரம் இரண்டு பாட வேளைகள் நுாலகத்துக்கு ஒதுக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை

திங்கள், 19 ஆகஸ்ட், 2019



வாரம் இரண்டு பாட வேளைகள் நுாலகத்துக்கு ஒதுக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் நுாலகம் செயல்படுவது குறித்து, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர், கமலக்கண்ணன், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, நுாலகங்கள் அமைக்கப்பட வேண்டும். நுாலகத்துக்கு தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அந்த பொறுப்பை, ஒரு ஆசிரியர் கவனிக்க வேண்டும். 

வாரம் இரண்டு பாட வேளைகள் நுாலகத்துக்கு ஒதுக்க வேண்டும். பாட வேளை கூடுதலாக கிடைத்தால், அதையும் நுாலக நேரமாக ஒதுக்கலாம்.புத்தகங்களை மாணவர்கள் படிக்க, வீட்டுக்கு கொடுத்தனுப்பலாம். புத்தகத்தை குறித்த காலத்தில் பெறுவதற்கு, உரிய உறுதி பெற வேண்டும். புத்தகங்களை சிறிது சேதப்படுத்தினால், மாணவர்களை தண்டிக்காமல் அறிவுரை கூற வேண்டும்.

பிறந்த நாளில் மாணவர்கள் சாக்லேட் போன்ற இனிப்புகள் வழங்கும் போது, நுாலகத்துக்கு புத்தகம் வழங்கவும் அறிவுறுத்த வேண்டும்.மாணவர்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்த, வாரம் ஒரு முறை, மாணவர்களை வழிபாட்டு கூட்டத்தில், படித்த புத்தகம் குறித்து, பேச வைக்க வேண்டும். புத்தகங்களை சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர்களிடம் கேட்டு பெற வேண்டும். புத்தக இருப்புகளை உரிய பதிவேட்டில் எழுதி பராமரிக்க வேண்டும். புத்தகங்களை பூச்சி அரிக்காமல் பாதுகாப்பது அவசியம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent