கணினி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு இந்த வார இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும். என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் 'மேட்பிக் ஆஸ்திரேலியா' என்ற நிறுவனமும் இணைந்து, அரசு பள்ளி மாணவர்கள், கணிதப் பாடத்தை எளிய வழியில் கற்பதற்கான, புதிய செயலி அறிமுக விழாவை, ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று நடத்தின. இந்நிகழ்ச்சியில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 128 பேருக்கு, மடிக்கணினி வழங்கப்பட்டது.அப்போது, அமைச்சர்,செங்கோட்டையன் பேசியதாவது:
அரசு பள்ளி மாணவர்கள், கணித பாடத்தை எளிய வழியில் கற்க, புதிய செயலி மூலம், 501 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். கணித பாடத்தில், 21 சதவீதம் மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக, அண்ணா பல்கலை ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, 'டேப்' வழங்கப்பட்டுள்ளது. இதில், 'சாப்ட்வேர்' உருவாக்கி, அரசு பள்ளி மாணவ - மாணவியர் சரளமாக, ஆங்கிலம் பேச நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.இந்தாண்டு அரசு பள்ளி களில், 1.78 லட்சம், மாணவ - மாணவியர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 14 ஆயிரம் ஆசிரியர்கள், கூடுதலாக உள்ளனர். ஒரு வாரத்தில், 'கவுன்சிலிங்' மூலம், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக