தலை, தோல் ஆகியவற்றில், 'மயிர்க்கால் செல்' என்ற சிறப்பு செல்கள் உள்ளன.
இவற்றிலிருந்து, முடி புடைத்து வெளிவருகிறது. வளர்நிலையில், புதிய செல்கள் மயிர்க்கால்களில் தோன்றி, பழைய செல்களை வெளித்தள்ளும். வளர்நிலைக்குப் பிறகு, சிறிது காலம் ஓய்வுநிலை ஏற்படும். வளர்காலம் எவ்வளவு நீண்டதாக அமைகிறதோ அதற்கு ஏற்றபடி, மயிரின் நீளம் அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. தலையில் உள்ள மயிர்க்கால்களில் ஓய்வுநிலை இன்றி, சுமார் ஓராண்டு காலம் வரை, தொடர்ந்து மயிர் புடைக்கும். ஆனால், ஏனைய உடல்பகுதியில் சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதம் மயிர் புடைத்த பின், ஓய்வு கொள்ளும். எனவேதான், தலைமுடி நீளமாகவும், ஏனைய உடல்பகுதியில் மயிர் நீளம் குறைவாகவும் அமைகிறது.
பொதுவாக, வளரிளம் பருவத்தில், ஹார்மோன்கள் செயல்பாட்டால் தூண்டப்பட்டு, முடி வேகமாக வளர்கிறது. வயது மூப்பு அடையும்போது, ஹார்மோன்களின் செயல் மாறும்; அப்போது, முடி வளர்வதும் குறைந்துபோகும்.
சில விலங்குகளின் உடலில் உள்ள முடி, ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்து வளர்ந்து, ஓய்வுநிலை வந்த பிறகு, சரியாக கோடையில் உதிரும். அதன் பின்னர், குளிர் காலத்தில் அடர்த்தியாக வளர்ந்து இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக