இந்த வலைப்பதிவில் தேடு

TET சிறப்பு தேர்விற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019



தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபி அருகே ஏளூரில் துணை மின் நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, சிறப்பு தேர்விற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் கவுன்சலிங் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிக்கும் பேராசிரியர் தேர்வு நடத்தப்படும்.

மேலும் ஆன்லைன் மூலமாக எந்த தவறும் நடைபெறாத வகையில் ஆசிரியர் பணி தேர்வு நடக்கும். ஆசிரியர் பற்றாக்குறை  உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். தற்ேபாது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லாததால், கடந்த 2012-13ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க இயலாத நிலை உள்ளது. 16,500  ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்தது. இந்த ஆண்டுதான் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி நிரப்பப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent