இந்த வலைப்பதிவில் தேடு

True Caller பயனாளர்கள் அதிர்ச்சி! - என்ன சொல்கிறது நிறுவனம்?

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019




தொலைபேசி அழைப்புகளை ட்ராக் செய்யும் ட்ரூகாலர் செயலில் பக் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


பொதுமக்கள் தெரியாத எண்களிலிருந்து தங்களுக்கு வரும் செல்ஃபோன் அழைப்புகளைத் தெரிந்துகொள்ளவும், தேவையில்லாத போன்கால்களை ப்ளாக் செய்யவும் ட்ரூகாலர் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இந்தச் செயலியை உபயோகித்து வருகின்றனர். அதன்மூலம் பயன்பெற்றும் வருகின்றனர். இப்படி ஏராளமானோர் பயன்படுத்தும் ட்ரூ காலரில் `பக்’ இருப்பதாகக் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ட்ரூகாலரில் சம்பந்தபட்ட பயனாளர்களின் அனுமதியில்லாமல் ஐசிஐசிஐ வங்கியில் யுபிஐ கணக்குகள் உருவாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரூகாலர் வெர்சன் 10.41.6 அப்டேட்டில் இதுபோன்ற பிரச்னை உள்ளதாகக் கூறப்படுகிறது.




``உங்கள் யுபிஐ கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது. இது நீங்கள் இல்லையென்றால் உடனே உங்கள் வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் கார்டு தொடர்பான தகவல்கள் வெளியில் யாரிடமும் கூறாதீர்கள் என்று எஸ்எம்ஸ் வந்துள்ளது. நான் நினைத்தேன் யாரோ மர்ம நபர் ஒருவர் என்னுடைய இன்டர்நெட் பேங்கிங் அக்கௌவுண்டை ஹெக் செய்ய முயன்றுள்ளார் என்று. உடனே நான் என்னுடைய நெட் பேங்கிங் மற்றும் டெபிட்கார்டை ப்ளாக் செய்துவிட்டேன்” என்று பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த அபாயத்தால் பலரும் ட்ரூ காலரை செயலியை அன் இன்ஸ்டால் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ட்ருகாலர் நிறுவனம் சார்பில், `சிரமத்துக்கு மன்னிக்கவும். வருவிருக்கும் புதிய வெர்சனில் அந்தப் பக் சரிசெய்யப்படும்” என கூறப்பட்டுள்ளதாக குயின்ட் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் பக் இருக்கும் பழைய வெர்ஷன் இனி தானாக அப்டேட் ஆகாது என்றும், ஏற்கெனவே அப்டேட் செய்தவர்களுக்காகப் புதிய அப்டேட் விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐசிஐசிஐ சார்பில் இது தொடர்பாக எந்தவித அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent