இந்த வலைப்பதிவில் தேடு

அரசாணை எண் 145 - சில கேள்விகளும் விளக்கங்களும் - சற்று விரிவாகத் தான் பார்ப்போமே!!!!

செவ்வாய், 3 செப்டம்பர், 2019



ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி /நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் வழங்குதல். ஒரே வளாகம் என்பது என்ன??


ஒரு சுற்றுசுவருக்குள் உள்ள பள்ளிகளில் சில நேரங்களில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், பின்னர் காலப்போக்கில் அந்த நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, அதன்பின் அவை மேனிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கும் பட்சத்தில் , அந்த வளாகத்திற்குள் ஒரு தொடக்கப்பள்ளியும், ஒரு மேனிலைப்பள்ளியும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இச்சூழலில் அந்த தொடக்கப்பள்ளி ஈராசிரியர் பள்ளியாக இருந்து , அதில் பணியாற்றும் இரண்டு பேரில் ஒருவர் விடுப்பு, பயிற்சி, இன்ன பிற பணிகள் காரணமாக வெளியில் செல்ல நேரும் சூழல்களில் , அங்கு பணியிலோ / பணியில்லாமல் / உபரியாகவோ இருந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு தொடக்கப்பள்ளியின் கற்றல் செயல்பாட்டை தொய்வில்லாமல் செயல்படுத்த அரசாணை 145 வழிவகை செய்யும் என அரசு தெரிவித்துள்ளதாகத் தான் நாம் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் இங்கு சந்தேகம் எங்கு எழுகிறது எனில் ஒரே வாளாகம் என்பதில் அரசின் வரையரை யாது என்பது தான்? இதனை அடுத்து வந்த அறிக்கையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி குறுவள மையங்கள் எனும் தலைப்பில் சுமார் 10 அல்லது 12 கிமீ ஆரத்திற்குள் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை அருகே உள்ள மேனிலைப்பள்ளிகளோடு இணைத்து , புதிய குறுவள மையங்கள் எனும் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த குறுவளமையங்கள் அனைத்தும் பின்னர் ஒருங்கிணந்த பள்ளி வளாகம் எனும் பெயரில் மாற்றம் பெறுமோ எனும் அய்யமும் ,கவலையும் தான் இன்றைய ஆசிரியர்களின் தலையாய சந்தேகமாக இருந்து வருகிறது. அரசாணை 145 ல் பத்தி 4ல் வரிசை எண் 1ல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதே பதவி மற்றும் ஊதிய விகிதத்துடன் தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்படுவர் எனக் குறிப்பிட்டிருந்தாலும், ஊடகம் மற்றும் பத்திரிக்கைச் செய்திகளில் இனி தொடக்க/ நடுநிலை தலைமை ஆசிரியர்கள் பதவி என்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது ஊடகங்களின் தவறான புரிதலின் அடிப்படையிம் எழும் கருத்தா ? அல்லது அரசின் குரலா என்பதை அரசே தெளிவாக வரையரை செய்யவேண்டும். 
ஏனெனில் ஒரு தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியரின் பணியிடத்தை ஒரு மேநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரால் நிரப்பிவிட முடியும் என அரசு நினைக்கும் எனில் அது மிகப் பெரிய நிர்வாகச் சிக்கலையும்,தொடக்கக் கல்வியின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தேக்க நிலையையும் ஏற்படுத்திவிடும். உதாரணமாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் ஒழிக்கப்பட்டு , அவரது அதிகாரங்கள் ,மாவட்டக் கல்வி அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்ட 01.06.2018 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுநிலை / சிறப்புநிலை முடித்து 16 மாதங்கள் ஆகியும் இன்னும் அதற்குரிய ஆணையை கூட பெறமுடியாமல் பணிகள் தேங்கிக் கிடக்கிறது. உயர்கல்வி முன்னனுமதி மற்றும் பின்னனுமதி ஆணைகள் படிப்பு காலமே முடிந்தாலும் பெறமுடியாத சூழலில் இருந்து வருகிறது. 
ஒரு கற்பனையாக அந்தந்த வட்டாரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலர்களுக்கு பதிலாக , மாவட்ட ஆட்சியர் அலுவலர்களே வட்டாட்சியர்களாக இனி செயல்படுவர் என அரசு அறிவிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு எவ்வாறு அல்லலோகப் பட வேண்டியிருக்குமோ அதைவிட பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்களும் , மாணவ, மாணவியர்களும் அல்லலோகப்பட வெண்டியிருக்கும்.
தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் அப்படி என்னத்தான் செய்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு…………
மே மாதம் :

1. ஏப்ரல் மாத இறுதியில் நடந்து முடிந்த ஆண்டுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் தயாரிப்பு , எதிர்வரும் கல்வி ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள், அதில் உத்தேசமாக முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளின் பெயர் பட்டியல் , அடுத்த கல்வியாண்டிற்குத் தேவையான அரசின் விலையில்லா பொருள்களிந்தேவைப்பட்டியல் ஆகியவற்றை தயார் செய்து வட்டாரக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறுதல். பள்ளி வயது பிள்ளைகளை கண்டறிந்து, அவர்களின் வீடு வீடாகச் சென்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்.
1. பள்ளியை விட்டு நீங்கிய அனைத்து 
மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்குவது.
2. 1 முதல் 5 / 8 வரை பள்ளியில் சேரும் 
மாணவர்களை உரிய ஆவணங்களின் அடிப்படையில் பள்ளியில் சேர்த்தல். அவர்களின் அனைத்து விவரங்களையும் ஆன்லைன் எமிஸ் இல் சேர்த்தல் , பழைய மாணவர்களை நீக்குதல்.
3. பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான மாணவர் சம்பந்தமான அனைத்து பதிவேடுகளையும் வழங்குதல் மற்றும் ஆசிரியர் / மாணவர் வருகை பதிவேடு வழங்குதல். பள்ளிக்குத்தேவையான 54 வகையான பதிவேடுகளையும் தயார் செய்தல் . 
4. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருள்களையும் , ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் நான்கு அல்லது 5 முறை வட்டாரக் கல்வி அலுவலகம் சென்று எடுத்து வருதல் அல்லது அருகில் உள்ள வட்டார அலுவலகம் சென்று எடுத்து வருதல்.
5. ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்குள் பள்ளி வளாகத்தின் 
தூய்மை, வகுப்பறை தூய்மை, கழிப்பறை தூய்மை, மாணவர்களின் குடிநீர் தேவை , பள்ளி சத்துணவு தயாரிப்பு பணிகளுக்கான குடிநீர் தேவை ஆகியவற்றில் போர்க்கால கவனம்.


6. காலை வழிப்பாட்டுக் கூட்டம் அதனை அடுத்த 
செயல்பாடுகள் முடிந்து , ஆசிரியர் மாணவர் மற்றும் மாணவர் வருகை பதிவை பதிவேடுகளில் முடித்து , அதன் பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முடித்து,பள்ளிக் கண்ணாடியை வகுப்புவாரியாக எழுதி சுற்றுக்கு விட்டப்பின், ,விடுப்பு எடுத்த ஆசிரியரின் வகுப்பிற்கு உரிய செயல்பாடுகளுக்கு வழிவகை செய்தல்.
7. பின்னர் சத்துணவு பணிகளை சென்று பார்வையிட்டு , சத்துணவு உண்ணும் மாணவர்களின் அன்றைய சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திற்கு எஸ் எம் எஸ் செய்தல்.
8. வட்டாரக் கல்வி அலுவலகத்திலிருந்து வரும் புள்ளிவிவர படிவங்களை தயார் செய்து , படிவங்களை நிரப்பி இமெயில் செய்தல்
9. எஸ் எஸ் ஏ அலுவலகத்திலிருந்து வரும் புள்ளிவிவர படிவங்களை தயார் செய்து , படிவங்களை நிரப்பி இமெயில் செய்தல்
10. சிறப்பு ஆசிரியர்களுக்கான சம்பள கேட்பு பட்டியல் தயார் செய்தல்
11. சம்பளத்திற்கான காசோலையை தயார் செய்து வங்கிக்கு சென்று செலுத்துதல்.
12. அதற்கான தகவலை மீண்டும் எஸ் எஸ் ஏ அலுவலகத்திற்கு 
அனுப்புதல் 
13. சுகாதாரப்பணியாளருக்கான காசோலை வழங்குதல் 
14.மேற்காண் அனைத்து பணியாளர்களுக்கும் வருகைப் பதிவேடு சம்பளப்பட்டியல் , செல்லுநமுனா தயார் செய்தல்.
15. அவ்வப்போது அரசினால் அனைத்து நலத்திட்டங்களுக்கும் உரிய பதிவேடுகளை தயார் செய்தல்.

16. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர அறிக்கை மற்றும் சம்பளப்பட்டியல் மற்றும் சம்பளப்பட்டியல் செல்லுநமுனா
தயார் செய்தல் 
17. மிகவும் பிற்பட்ட குழந்தைகளுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பெற்று வழங்குதல் 
18. மைனாரிட்டி குழந்தைகளுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பெற்று வழங்குதல் 
19. மாதந்தோறும் SMC , PTA கூட்டங்களை நடத்துதல்.
20. வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்க்ளை அனுப்பி வைத்தல் மற்றும் தானும் கலந்து கொள்ளுதல்.
21. தினந்தோறும் பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் , பள்ளிச் சான்று மற்றும் மாணவர் அடைவுதிறன் , விடுப்புகள் குறித்த பேச வரும் பெற்றோர்கள் சந்திப்பு.
22. கால அட்டவணைப்படி ஆசிரியர்கள் இருப்பை வகுப்பில் சரிபார்த்தல் 
23. அவ்வப்போது வட்ட அளவில், மாவட்ட அளவில் , மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களை தயார் செய்வது, அனுப்பி வைப்பது.
24. மூன்று பருவங்களுக்குரிய தேர்வுகளுக்கு வினாத்தாள் வழங்வது, விடைத்தாள் வழங்குவது.
25. இடையிடையே அரசு அறிவிக்கும் போது பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிறு நாள்களில் வாக்ககாளர் சேர்க்கை மற்றும் நீக்கல் பணிகளை மேற்கொள்வது.
26. இடையிடையே வரும் அரசு பொதுவிழாக்களை பள்ளிகளில் கொண்டாடுவது.

என இன்னும் விடுபட்ட அனைத்து பணிகளையும் ஒரு குறுவள வட்டத்திற்கு என நியமனம் செய்யப்பட்ட மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியரே அனைத்து பள்ளிகளுக்கும் மேற்கொள்வார் என்பது தான் அரசாணை 145 ன் சாரம் எனில் இங்கே கவலைபட வேண்டியவர்கள் யார் ????? தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களா அல்லது ஆசிரியர்களா?? 
சற்று சிந்தித்து பார்த்து , சீர்தூக்கி பாருங்கள் !!!!

அரசாணை 145 சாதகமா அல்லது பாதகமா???????

- சிவநேசன் முத்து - குளித்தலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent