இந்த வலைப்பதிவில் தேடு

5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?

சனி, 28 செப்டம்பர், 2019





ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.


இதையடுத்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.இந்த அரசாணை, அனைத்து பள்ளிகளுக்கும்அனுப்பப்பட்டு, தேர்வுக்கு தயாராகும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததும், பொதுத் தேர்வு நடத்துவதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறப்பட்டு உள்ளதாக, தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.


ஆனால், அவரது அறிவிப்பு தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, எந்தவித எழுத்துப்பூர்வ உத்தரவையும், பள்ளி கல்வித் துறை பிறப்பிக்கவில்லை.அதனால், பொதுத் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்குமாறு,பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதனால், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளிகள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

இது குறித்து, சரியான விளக்கத்தை, பள்ளி கல்வித் துறை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent