மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இனி அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கல்வி சார் மேம்படுத்தும் வகையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இனி அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: குறுவள மைய பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித்தரம் மேம்பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை செப். 1ம் தேதி முதல் (இன்று) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக