இந்த வலைப்பதிவில் தேடு

புதுவகையில் பாடம் கற்பிக்கும் திட்டம்... பள்ளிகளில் சோதனை முயற்சி

புதன், 25 செப்டம்பர், 2019




பள்ளிக்கல்வி துறை அனுமதியுடன், இத்திட்டம், முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட, ஐந்து பள்ளிகளில் அமலாகிறது.தேசிய அளவில், தமிழகத்தில் ஆண்டுதோறும், துவக்க கல்வியில், ஒரு சதவீதம்; உயர்நிலைக் கல்வியில், 12 சதவீதம்; மேல் நிலைக் கல்வியில், 14 சதவீதம் என, மாணவ - மாணவியர் தேர்வுகளில் தோல்வியடைந்து, பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.'நிசப்தா சேவா'கடந்த, 2017- - 18ம் கல்வியாண்டில், மாநில அளவில் நடந்த, பிளஸ் 1 பொதுத் தேர்வில், 600க்கு, 500 மதிப்பெண்களுக்கு மேல், 4.29 சதவீதத்தினரும், 451 - -500 மதிப்பெண்களை, 7.65 சதவீதத்தினரும் பெற்று, தேர்ச்சியடைந்தனர்.இதில், அதிகபட்சமாக ஆரம்ப நிலையில், 201- - 300 மதிப்பெண்களை, 29.25 சதவீதத்தினரும், அதற்கு, அடுத்த படியாக, 301- - 350 மதிப்பெண்களை, 22.86 சதவீதத்தினரும் பெற்று தேர்ச்சியடைந்தனர்.



கடந்தாண்டு பொதுத்தேர்வில், சராசரி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்தவர்களை விட, ஆரம்ப நிலையில் தேறியவர்களே அதிகம். இதையடுத்து, மாணவ - மாணவியரின் இடைநிற்றலை தடுக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற வைக்க வும், சென்னையைச் சேர்ந்த, 'நிசப்தா சேவா' என்ற, தனியார் அமைப்பு, பாடங்களை, காணொளி காட்சிகளாக மாற்றி கற்பிக்கும் புதிய முறையை, அறிமுகம் செய்ய உள்ளது.இது குறித்து, அமைப்பின் நிறுவனர், ஆ.விஸ்வநாதன், 45 கூறியதாவது:எங்கள் நிறுவனம் சார்பில், கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், மருத்துவ முகாம்கள் நடத்துவது வழக்கம். சமீபத்தில், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில், முகாம் நடத்திய போது, எங்கள் குழுவினரிடம் இருந்து, 'ஆன்ட்ராய்டு' மொபைல் போனை வாங்கி, அப்பகுதி சிறுவர்கள், ஆவலுடன் பார்த்தனர்.அவர்களிடம், ஏற்கனவே நாங்கள் தயார் செய்து வைத்திருந்த, பாடங்களின் காணொளி களை காட்டினோம். அவர்கள் மகிழ்ச்சியடைந்து, 'இந்த முறையில் கற்பித்தால், நாங்கள் எளிதில் கல்வி கற்போம்' என்றனர்.

தொடர்ந்து, இக்கல்வி முறையை, முழுவதுமாக தயார் செய்ய, எங்கள் குழுவினருடன் இணைந்து, மதுரையில், காணொளி காட்சி தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டது.மாநிலம் முழுவதும்முதற்கட்டமாக, பிளஸ் 1 வகுப்பு மாநில பாடங்களை மட்டும், காணொளி காட்சிகளாக மாற்றிஉள்ளோம்.இதை, சோதனை அடிப்படையில், சென்னையில் உள்ள, ஐந்து அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம். அதில், இரண்டு பள்ளிகள், பழங்குடியின மாணவர்கள் படிப்பவை.
இதற்காக, பள்ளிக்கல்வித் துறையிடம் அனுமதி யும் பெறப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தால், அரசு அனுமதியுடன், மாநிலம் முழுவதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.இத்திட்டத்தின் வாயிலாக, வகுப்புகளுக்கு தாமதமாக வரும் அல்லது வகுப்புகளை தவறவிடும் மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் அடையும் மாணவர்கள், திரும்பவும், பாடங்களை ஆசிரியர்கள் வழியாக, காணொளியில் பார்த்து, தெளிவு பெறலாம்.திட்டம் குறித்து, மேலும் விபரமறிய, 97907 24069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
திரையில் காண்பது எப்படி?

பாடங்களை, காணொளி காட்சிகளாக காண, ஒவ்வொரு வகுப்பிற்கும், 'குரோம் காஸ்ட் தொழில்நுட்பம்' அடங்கிய, 60 இன்ச், 'ஸ்மார்ட் டிவி' மற்றும் ஒரு, 'ஆன்ட்ராய்டு' மொபைல் போன் கொடுக்கப்படும். ஐந்து முதல் ஆறு ஒலிப்பெருக்கிகள், 'டிவி'யுடன் இணைக்கப்படும். ஆசிரியர்கள், மொபைல் போனில் உள்ள இணையதளம் வழியாக, டிவியில் உள்ள தொழில்நுட்பத்தை இயக்கினால், ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பாடங்கள், டிவியில் கற்பிக்கப்படும். இவ்வகையான புதுக் கல்விமுறையால், மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி, கல்வி கற்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent