இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த தொடர் கண்காணிப்பு; கல்வித்துறை தீவிரம்

புதன், 4 செப்டம்பர், 2019



பள்ளிகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்களை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்வது என, அரசுப்பள்ளிகளின் கண்காணிப்பில் கல்வித்துறை தீவிரம் காட்டுகிறது.அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி இயக்ககம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.இந்த மாற்றம், கடந்தாண்டு முதல் பயிற்சிகள் வழங்குவதிலும் செயல்படுத்தப்பட்டது.




அனைவருக்கும் மற்றும் இடைநிலை கல்வி இயக்கங்களின் சார்பில் பயிற்சி நடத்தப்படுவதை, அந்தந்த மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள் கண்காணித்து வழிநடத்தும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.நடப்பு கல்வியாண்டில், பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்களை மேம்படுத்த, பள்ளிகளில் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டுமென, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு மாநில கல்வியியல் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.இதில், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒரு மாதத்தில் 16 பள்ளிகளை ஆய்வு செய்யும் வகையில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். ஆய்வின் போது, பள்ளி துவங்குவது முதல் மாலை வரை பள்ளியில் இருக்க வேண்டும். 





ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பிற பாடங்களை கையாளும் ஆளுமை மிக்க ஒருவரை, பள்ளிகளுக்கு அழைத்துச்சென்று, பயிற்சிகளை வழங்கலாம். இவ்வாறு, ஆய்வு செய்வதில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு செயல்பாடுகள் குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வியாண்டின் துவக்கத்தில் பட்டியலிட்டுள்ளது.தற்போது, மீண்டும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு நடத்துவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த, தொடர் ஆய்வுகளுக்கு கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent