இந்த வலைப்பதிவில் தேடு

சமூக வலைத்தளங்களில் ஆசிரியைகளின் புகைப்படங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

வியாழன், 5 செப்டம்பர், 2019



அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் எடுக்கப்படும் (பெண்கள் சார்ந்த) புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யக்கூடாது என தமிழக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது இதர சில ஆசிரியர்கள்
அப்படி செய்கையில் பல்வேறு உள்ளீட்டு சிக்கல்கள் இருப்பதால் அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண் ஆசிரியைகளின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதியின்றியோ அல்லது வற்புறுத்தியோ பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றம்.

பள்ளி வளாக பொதுநிகழ்ச்சிப் புகைப்படங்கள் தக்க கட்டுப்பாடுகளுடன் சுய கோப்புகளாக சேமிக்கலாம்.

மீளேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்ய இயலாத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட  BLOG களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent