தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், பணிப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. தற்போது, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் பலரும், தங்கள் சொத்து விபரத்தை, முழுமையாக பதிவு செய்யாமல், அலட்சியம் காட்டுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரத்தை, பணிப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது, துறை ரீதியான, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக