இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

வியாழன், 5 செப்டம்பர், 2019





90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் 377 ஆசிரியர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறுவதாவது;ஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார். 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.



பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். முதல்வர் ஒப்புதலை பெற்ற பிறகு ஒரு வாரத்தில் பின்லாந்து நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் அனுப்பப்படும். தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்கள் பின்லாந்து நூலகங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent