இந்த வலைப்பதிவில் தேடு

பெண்கள் தலையில் பூ சூடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை

புதன், 25 செப்டம்பர், 2019




தமிழக பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூட சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.


உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.


தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

நம்மைச் சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை (observation) அதிகரிக்கச்செய்கிறது.


பூக்களைச் சூடும் முறை:

மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றை கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent