இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 12.09.2019

வியாழன், 12 செப்டம்பர், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்



திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்


திருக்குறள்:278

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

விளக்கம்:

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர்  உள்ளனர்.

பழமொழி

Little wealth, little care.

 மடியில் கனம் இருந்தால் வழியிலே பயம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது இருப்பிடம் மற்றும் தெரு சுத்தமாக இருக்க முயல்வேன். எனது சுற்றத்தார் தெருவில் இருப்போரும் அவ்வாறு இருக்க வலியுறுத்துவேன்.

2. தூய்மை பாரதத்திற்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

பொன்மொழி

துணிவோடும்,தெளிவோடும்,உள்ள உறுதியோடும் உழைத்தால் தடைகள் தடமாகும்.தொல்லைகள் தொலைந்து போகும்.

____முனைவர்.வரதராசு

பொது அறிவு

1. மிகவும் வெப்பமான கோள் எது?

வெள்ளி

2. மிகவும் குளிரான கோள் எது?

நெப்டியூன்

English words & meanings

* Nickel - a metal used to make coins.
நிக்கல் எனும் உலோகம்.
நாணயங்கள் செய்வதற்கு உபயோகப் படும். இது ஒரு காந்தப்பொருள்.

* Numbly - without feeling.
உணர்வற்ற தன்மை

ஆரோக்ய வாழ்வு

மணத்தக்காளியின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை .சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கும்.


Some important  abbreviations for students

* AQ = Antarctica

* AR = Argentina

நீதிக்கதை

வல்லவர் யார்?

ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது.

மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது.


அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது.

எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.


இன்றைய செய்திகள்

12.09.2019

* போக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

* அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மாணவர்கள் பிளாஸ்டிக்கைத் தண்ணீராக மாற்றும் காளானை கண்டுபிடித்துள்ளனர்.




* பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தர படுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

* 2020 டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெல்ஜியம் சென்று விளையாடுகிறது.

* கர்நாடகாவில் நடைபெறும் தென்மண்டல தடகள போட்டியில் கலந்து கொள்ள தமிழகம் சார்பில் 200 பேர் தேர்வாகியுள்ளனர்.


Today's Headlines

🌸State Road Transport Minister Nitin Gadkari has said that the state government can decide on the issue of heavy fines on traffic violations.

 🌸Yale University students in the United States have discovered mushrooms that turn plastic into water.

 🌸School Education Secretary  Thiru. Pradeep Yadav has given the GO to make the 19,427 teaching and non-teaching staff permanent after a long await as temporary employees.

 🌸 Indian men's hockey team travels to Belgium to prepare for the 2020 Tokyo Olympic to get promoted to the qualifying round .

 🌸200 Players have been selected to competete in  South Zonal Athletics which is held in Karnataka on behalf  of Tamil Nadu.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent