இந்த வலைப்பதிவில் தேடு

DIKSHA APP - சிறப்பாக செயல்படுத்திய மாவட்டம் எது? - சான்றிதழ் வழங்கி CEO - கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

திங்கள், 9 செப்டம்பர், 2019




பள்ளிகளில் பாடம் நடத்துவதற்கு, மத்திய அரசின் சார்பில், தீக் ஷா செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் வழியே, ஆசிரியர்கள் பதிவு செய்து, பாடங்களை தரவிறக்கம் செய்யலாம். மேலும், பாடங்கள் தொடர்பான செய்முறை பயிற்சிகள், வீடியோ மற்றும் படங்களும் உள்ளன. இவற்றை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த, தமிழக பள்ளி கல்வித்துறை பயிற்சி வழங்கியது.


இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், மாநில அளவில், தீக் ஷா செயலியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, சென்னை மாவட்டம், முதல் பரிசு பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அதிகாரி, ராஜேந்திரன் சான்றிதழை பெற்றார்.பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன், சென்னை மாவட்ட கல்வி அதிகாரிகளை பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent